ARTICLE AD BOX

எப்போ வர்றீங்க. இந்த ஒரு வார்த்தை ஒட்டுமொத்த கணவர்களையும் எரிச்சலடையும் வார்த்தை. எந்த ஒரு கணவன்மார்களும் வெளியே போனாலும் அவர்களின் மனைவிகளிடமிருந்து தொலைபேசி வாயிலாக முதன் முதலில் கேட்கும் வார்த்தைதான் எப்போ வர்றீங்க. சாதாரணமாக கேட்கும் மனைவிமார்களும் இருக்கிறார்கள். கோபத்தின் உச்சியில் கேட்கும் மனைவிமார்களும் இருக்கிறார்கள். அப்படி எப்போ வர்றீங்க என்ற வார்த்தை வெகுஜன மக்கள் மத்தியில் பிரபலமாகி போனது என்றால் அது மைனா படம் ரிலீஸ் ஆன பிறகுதான்.
அந்த படத்தில் வில்லி கேரக்டரில் நடித்தவர் சூசன் ஜார்ஜ். படத்தில் அவருடைய கணவர் ஒரு காவல்துறை அதிகாரி. அவர் ஒரு கேஸ் விஷயமாக வெளியூர் செல்ல சூசன் ஜார்ஜ் அடிக்கடி போன் செய்து தன் கணவரிடம் எப்போ வர்றீங்க என மிரட்டும் தொணியில் பேசுவது அதை பார்த்த மற்ற கணவன்மார்களுக்கு ஒரு பயத்தை வரவழைத்தது. அது மீம்ஸ் மெட்டீரியலாகவும் மாறியது .
சூசன் ஜார்ஜை பொறுத்த வரைக்கும் முதலில் சின்னத்திரையில் தான் நடிக்க ஆரம்பித்தார். தென்றல் சீரியலில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து அசத்தியிருப்பார் சூசன் சார்ஜ். அதன் பிறகு கோலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்து முதன் முதலில் மைனா படத்தின் மூலமாகத்தான் அவருக்கு வெள்ளி திரை வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே வில்லியாக நடித்து அனைவரையும் மிரட்டினார் சூசன் ஜார்ஜ்.
அதன் பிறகு அவர் சின்னத்திரையிலும் ஆளவே காணோம். வெள்ளித்திரையிலும் ஆளவே காணோம். ஆனால் மீண்டும் இப்போது கம் பேக் கொடுத்திருக்கிறார் சூசன் ஜார்ஜ் .பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறாராம் சூசன் ஜார்ஜ். இதிலும் வில்லி கதாபாத்திரம் என்றுதான் சொல்லப்படுகிறது .மைனா படத்தை விட இந்த படத்தில் அவருடைய கேரக்டர் இன்னும் கொடூரமான வில்லியாக இருக்கும் என்று தெரிகிறது.
இவருடைய கணவர் ஒரு ஐடி கம்பெனியில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறாராம். இவரும் ஏற்கனவே டி எல் எப் ஐடி கம்பெனியில் வேலை பார்த்தவர் தான். தற்போது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார் சூசன் ஜார்ஜ். அதனால் அவர் அடுத்து நடிக்க இருக்கும் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் எப்படிப்பட்ட ஒரு வில்லி கேரக்டரை வெளிப்படுத்துகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அது போக இன்னும் நான்கு படங்களில் அவர் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.