ARTICLE AD BOX
என்னையும் விஜய்யையும் ஒன்றாக பார்க்க ஆசை.. நிறைய மெசேஜஸ் வரும்.. ஓபனாக பேசிய திரிஷா
சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக இருவரும் லியோ படத்தில் நடித்தார்கள். அடுத்ததாக GOAT படத்தில் ஒரு பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனமாடினார்கள். சூழல் இப்படி இருக்க திரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திரிஷா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் கடைசியாக GOAT படத்தில் நடித்தார். அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போது கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் விஜய்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட வியாபாரத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு அவர் வருவதை பலரும் பாராட்டிவருகிறார்கள். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன்: வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன. அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விஜய் இன்னும் சினிமாவில் நடிக்கலாம் என்று ஏக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜயோ இன்னும் ஒரு படத்தில்தான் நடிப்பது என்று எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார். அதேசமயம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது மனக்கணக்கு பலிக்கவில்லை என்றால் கண்டிப்பாக விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார் என்று ஒருதரப்பினர் ஆணித்தரமாக சொல்கிறார்கள்.
விஜய் கார் நம்பர் பிளேட்டை கவனிச்சீங்களா.. அட நண்பர் AK பெயர் இருக்கே.. குஷியான ரசிகர்கள்!
இப்போதே களத்தில்: இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தாக்கத்தை வீரியமாக காட்ட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காகன முன்னெடுப்புகளில் விஜய் இப்போது தீவிரமாக களமாட ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் பரந்தூர் சென்று பரபரப்பை பற்றவைத்த விஜய்; நேற்று ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டார். மேலும் மூன்றாம்கட்ட மாவட்ட செயலாளர்களையும் நியமித்து உரையாற்றினார்.
விஜய் - திரிஷா: இதற்கிடையே விஜய்க்கும் திமுகவுக்கும் அரசியல் களத்தில் பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. விஜய் திமுகவை விமர்சிக்க; பதிலுக்கு விஜய்யை திமுகவினரும் விமர்சிக்கிறார்கள். முக்கியமாக விஜய் - திரிஷாவை இணைத்து பலர் விமர்சனத்தை முன்வைத்துவருகிறார்கள். ஆனால் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என்று விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
எனக்கு திரிஷாதான்.. நிறைய பேர் சொல்லிருக்காங்க.. விஜய் பட்டுனு போட்டு உடைச்சிட்டாரே
திரிஷாவின் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து திரிஷா கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "விஜய்யிடம் எப்பவுமே ஒரு சாந்தி இருக்கும். ரொம்பவே அமைதியாக இருப்பார்.அவருக்குள் ஒரு இன்னர் பீஸ் இருக்கும். நாங்கள் ஒரு ஹிட் ஜோடி ஆகிட்டோம். உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். கில்லியோ, திருப்பாச்சியோ டிவியில் ஓடினால் எனக்கு நிறைய மெசேஜஸ் வரும். மக்கள் அதை விரும்புகிறார்கள்" என்றார்.