'என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்ல நீங்க யார்?' - கடுகடுத்த சீமான்

20 hours ago
ARTICLE AD BOX

``பெண்களை அவதூறாகப் பேசுவதை கேட்டுக்கொண்டு, சகித்துக் கொண்டு சீமான் உடன் எப்படி கட்சியில் இருக்கிறார்கள்? என எனக்கு தெரியவில்லை" என கனிமொழி கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக சீமான் பேசியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், "என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்ல நீங்கள் யார்? எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள்.

நீங்கள் நீதிபதியா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உங்கள் கருத்து என்ன? அண்ணா பலகலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பம் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. என்னை எதிர்கொள்ள முடியாமல் நடுங்குகின்றனர். என்னைப் பார்த்து நடுங்குவதால் எனக்கு எதிராக சதி செய்கின்றனர்.

நாடெங்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்தபோது கனிமொழி வாய் திறந்தாரா? புதிய கல்விக்கொள்கையில் உங்களின் நிலைப்பாடு என்ன? எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பதுதான் உங்கள் கொள்கையா? உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்?

சீமான்

தமிழ்நாட்டில் இருந்து நாள்தோறும் 1 லட்சம் டன் பாறைகள் கொண்டுசெல்லப்படுகின்றன. கேரள மாநிலத்தின் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகின்றன. இதில் எல்லாம் கருத்து சொல்லாமல் இதற்கு வந்து கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். வழக்கில் தீர்ப்பு வந்தப்பிறகு எதுவாக இருந்தாலும் பேசுங்கள். திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி நான்" என்று கட்டமாக பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article