ARTICLE AD BOX
என்னை பகைச்சிக்கிட்டா ஜெயிலுக்குதான் போகனும்! நீதித்துறையை மிரட்டிய டிரம்ப்!
நியூயார்க்: அமெரிக்க நீதித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், என்னை பகைத்துக் கொள்பவர்களுக்கு சிறைதான் தண்டனையாக கிடைக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.
ஏற்கெனவே டிரம்ப் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கிறது. இந்த வழக்கின் மீதான விசாரணையை நீர்த்துப்போக செய்யும் விதமாக அவருடைய மிரட்டல் தொனி இருக்கிறது என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

டிரம்ப் பேசியது என்ன?:
"2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அமெரிக்காவின் மிகப்பெரிய அவமானம். இந்த மோசடியான தேர்தல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை செய்தவர்கள் மீது விசாரணையை நடத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்பவும் 2024 தேர்தலில் மக்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே மோசடியை செய்தவர்கள் சிறைக்கு போக வேண்டும்" என்று டிரம் நேற்று பேசியிருக்கிறார். நீதிபதிகள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான வெளிப்படையான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்திருந்தார். அவருக்கு பதிலாக பைடன் அதிபரானார். இதனையடுத்து இப்போது மீண்டும் டிரம்ப் அதிபராகியுள்ள நிலையில், தன்னை தோல்வியடைய செய்தவர்களை பழி தீர்த்துக்கொள்ள டிரம்ப் வேண்டாத வேலையை செய்வார் என்று ஏற்கெனவே பேசப்பட்டு வந்தது. இந்த பேச்சுகள் தற்போது உறுதியாகியிருக்கின்றன.
2 முக்கியமான வழக்குகள்:
இதனை வெறுமென பழிதீர்க்கும் நடவடிக்கை என்று சுருக்கிவிட முடியாது. ஏனெனில் டிரம்ப் மீது இரண்டு முக்கியமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்கின் மீதான விசாரணையை நீர்த்துப்போக செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சியாக இது இருக்கலாம் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
1. டாப் சீக்ரெட் ஆவணங்களை மரா-லாகோ (Mar-a-Lago) மாளிகைக்கு கடத்தியது
2. 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக கூறப்படும் வழக்கு
பொட்டி படுக்கையுடன் சீக்ரெட் ஆவணங்கள்:
முதல் வழக்கை பொறுத்தவரை, கடந்த 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். எனவே, அவர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. வெளியே போகும்போது தனது பொட்டி படுக்கைகளுடன் சில முக்கிய ரகசிய ஆவணங்களையும் எடுத்துச்சென்றார். கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அவரது சொகுசு பங்களாவான மரா-லாகோவில் மறைத்து வைக்கப்பட்டது. புதியதாக ஆட்சிக்கு வந்த பைடன் ரகசிய ஆவணங்களை சரிபார்க்க தொடங்கினார். அதில் சில மிஸ்ஸாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து டிரம்ப் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, அவரது பங்களாவில் FBI அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். ரெய்டில் கொத்து கொத்தாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையை சொதப்பவே, நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
மிரட்டல் தொனி:
இரண்டாவது வழக்கை பொறுத்தவரை, டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. அதாவது 2020ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் டிரம்ப்-பைடன் இடையே குறைந்த வாக்குகள் வித்தியாசம்தான் இருந்தது. உடனே அந்த மாகணத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரிக்கு போன் போட்டு.. "ஆனது ஆகிபோச்சு! எனக்கு இன்னும் கொஞ்சம் ஓட்டு தேறுதானு பாருங்க" என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.
அது மட்டும் கிடையாது தனது ஆதரவாளர்களை வைத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணையை ஒன்றுமில்லாமல் செய்யவே தற்போது நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் என்று படைன் கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
பத்திரிகையாளர்களுக்கும் மிரட்டல்:
டிரம்ப் பதவியேற்றத்திலிருந்து சில நீதிபதிகளையும், அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் வேலையை விட்டு அனுப்பியுள்ளார். இவர்கள் அனைவரும் பைடன் காலத்தில் பொறுப்பேற்றவர்கள். நீதிபதிகளோடு டிரம்ப் தனது எச்சரிக்கையை நிறுத்திக்கொள்ளவில்லை. பத்திரிகையாளர்களையும் போட்டு தாக்கியிருக்கிறார். நீங்கள் என்னை தவறாக சித்தரித்ததுதான் என் மீதான இமேஜ் டேமேஜ் ஆக காரணம் என்று பழிபோட்டிருக்கிறார்.
வானம் நீலமாக இருக்கிறது எனில், அதை நீலம் என்று தானே சொல்ல முடியும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!
- டிரம்ப்தான் அதிபர்.. ஆனால் அவர் போட்டு இருக்குற டிரெஸ்.. அமெரிக்காவின் நிழல் அதிபரா எலான் மஸ்க்
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு விழுந்த பெரிய அடி.. அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
- பனாமா கால்வாயை கைப்பற்றும் டிரம்ப்? படையை குவிக்கும் அமெரிக்கா.. வெள்ளை மாளிகை போட்ட உத்தரவு
- கிரீன் கார்டு இருந்தாலும்.. அமெரிக்காவில் நிரந்தரமாக தங்க முடியாது! சர்ச்சையை கிளப்பிய துணை அதிபர்
- அடிமடியிலேயே கை வைத்த டொனால்ட் ட்ரம்ப்.. அலறுதே அட்லாண்டிக்! சரக்குக்கு வரி.. அதுவும் 200 சதவீதமாமே!
- டிரைவர் சீட்டில் டிரம்ப்! பக்கத்தில் எலான் மஸ்க்! ஆனாலும் ஆசையாக வாங்கிய டெஸ்லா காரை ஓட்டவில்லை ஏன்?
- இந்தியாவிற்கு போடப்பட்ட கொக்கி.. டிரம்ப் விரித்த பெரிய வலை.. வெள்ளை மாளிகையின் மோசமான முடிவு
- கண்ணா நீ தூங்குடா.. ஆட்டம் காணும் அமெரிக்க பங்கு சந்தை! விழி பிதுங்கிய டிரம்ப்
- ரத்த குளியல் போடும் இந்திய ஐடி பங்குகள்.. பின்னால் உள்ள டிரம்ப் கனெக்ஷன்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்
- பாலஸ்தீனர்களை நாடு கடத்தும் அமெரிக்கா! ஆப்பிரிக்க நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை
- திடீரென ரத்த நிறத்துக்கு மாறிய நிலா.. வானில் நிகழ்ந்த அற்புதம்.. சந்திர கிரகணத்தை ரசித்த மக்கள்
- "டிரம்பை பார்த்து பயப்படும் புதின்.. பேசவே பயப்படுறாரு..!" வம்பு இழுக்கும் ஜெலன்ஸ்கி! என்ன மேட்டர்?
- கேர்ள் பிரண்ட் உடன் "தனிமையில்" இருந்த இளைஞனை சுட்ட நாய்? உண்மையில் என்ன நடந்தது! வினோதத்தின் உச்சம்
- கொடி பறக்குதா.. விண்வெளியில் இஸ்ரோ மேஜிக்! சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அங்கீகாரம்!