ARTICLE AD BOX
உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்தது விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
மார்ச் 18, 2025 செவ்வாய்க்கிழமை புதின் மற்றும் டிரம்ப் தொலைபேசியில் பேசினர், ரஷ்யா, உக்ரைன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்தது. இரு உலகத் தலைவர்களும் இறுதியில் செவ்வாயன்று ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அங்கு அமெரிக்க ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கோரிய உக்ரைனில் 30 நாள் போர்நிறுத்தத்தை டொனால்ட் டிரம்பிற்கு வழங்க புடின் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை மட்டுப்படுத்த மட்டுமே புடின் ஒப்புக்கொண்டார்.
டிரம்பின் தொலைபேசி அழைப்புக்கு சற்று முன்பு வரை புடின் ஒரு நிகழ்ச்சியில் அகலந்து கொண்டு இருந்தார். அவருக்கு டிரம்புடனான அழைப்பு குறித்து அவரது உதவியாளர்கள் கூறியபோது, இருக்கட்டும், இதற்கு டிரம்ப் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்” எனக் கூறி விட்டு சிரித்தார். அந்தப்புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. ரஷ்ய அதிபர் மாஸ்கோவில் நடந்த வருடாந்திர நிகழ்வில் தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிக் கொண்டிருந்தார்.
செவ்வாய்க்கிழமை ரஷ்ய நேரப்படி மாலை 4 மணி முதல் 6 மணி வரை டிரம்புடனான அவரது திட்டமிடப்பட்ட தொலைபேசி அழைப்பிற்கு சற்று முன்பு இந்த நிகழ்வு நடந்தது. மாலை 4 மணிக்குப் பிறகு, புடினுக்கு அழைப்பிற்கு தாமதமாக வருவதாக தொகுப்பாளர் நினைவூட்டினார். ரஷ்ய ஜனாதிபதி சிரித்துக்கொண்டே தோள்களைக் குலுக்கிக் கொண்டிருப்பது படமாக்கப்பட்டது. அழைப்பு தொடங்க வேண்டிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் மாலை 5 மணியளவில் கிரெம்ளினுக்குய் வந்து சேர்ந்தார்.
பலர் இதை டொனால்ட் டிரம்பின் ‘அவமானம்’ என்றும் புடினின் அதிகார நாடகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கூறுகின்றனர். “தலைவர்களை காத்திருக்க வைப்பது புடினின் பழைய அதிகார நாடகம். ஆனால் இது மிகவும் கொடூரமானது” என்று கூறுகிறார்கள். “ஒரு தன்னலக்குழுவினர் நிறைந்த ஒரு அறையில் பேசிக் கொண்டிருக்கும்போது, தொகுப்பாளர் அவரை நோக்கித் திரும்பி, அவர் தாமதமாக வருவாரா என்று கேட்கிறார். புடின் தோள்களைக் குலுக்கிக் கொள்கிறார். அவர் டொனால்ட் டிரம்பை முழுமையாக அவமானப்படுத்தினார்” என்று கொந்தளிக்கிறார்கள் டிரம்ப் ஆதரவாளர்கள்.
“புடின், டிரம்பை ஒரு பிடில் போல விளையாடினார். புடினுக்கு உண்மையான போர்நிறுத்தம் செய்யும் எண்ணம் இல்லை. எரிசக்தி இலக்குகளில் ஒரு வரம்பை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதற்கு மேல் எதுவும் இல்லை. உக்ரைனுக்கு எந்த இராணுவ உதவியும் வழங்கப்படவோ, உளவுத்துறை உதவியோ அல்லது உக்ரைன் நேட்டோவில் சேரவோ அவர் விரும்பவில்லை” என்று விமர்சித்து வருகின்றனர்.