என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது - நடிகை சாபம்

19 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பெண் என்றும் பாராமல் படு ஆபாசமாக பேசினார். சீமான் பேசியதில் பல வார்த்தைகளை ஊடகங்கள் மியூட் செய்து ஒளிப்பரப்பும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. சீமானின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதேபோல் பெண் அரசியல் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள் நீங்கள் நீதிபதியாக என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தநிலையில், என்னுடைய கண்ணீர் சும்மா விடாது. சீமான் இனி நன்றாக இருக்க மாட்டார். இனி நிம்மதியாக சீமான் இருக்கமுடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்யப்போகிறது என்று பார் என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ளார். பாலியல் தொழிலாளி என சீமான் விமர்சனம் செய்த நிலையில் நடிகை கண்ணீருடன் நடிகை சாபம் விட்டுள்ளார்.


Read Entire Article