'என்னுடன் நடிக்க பல ஹீரோயின்கள் மறுத்தனர்' - பிரபல நடிகர் வருத்தம்

7 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சப்தகிரி. இவர் தற்போது ஹீரோவாக மாறியுள்ளவர். அதன்படி, இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் "பெல்லி காணி பிரசாத்" . அபிலாஷ் ரெட்டி கோபிடி இயக்கிய இப்படத்தில் பிரியங்கா ஷர்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சமூக செய்தியை உள்ளடக்கி காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது, நடிகர் சப்தகிரி, இப்படத்தில் கதாநாயகியை தேர்வு செய்வதில் பல சவால்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

அதன்படி, புதுமுகங்கள், அதிகம் அறியப்படாத நடிகைகள் என பல ஹீரோயின்கள் தன்னுடன் இணைந்து பணியாற்ற மறுத்துவிட்டதாக கூறினார். மேலும், தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக நடிகை பிரியங்கா ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்தார்

தன்னைப் போன்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக நடிப்பவர்கள் பல அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது என்று சப்தகிரி வருத்தம் தெரிவித்தார்.

Read Entire Article