ARTICLE AD BOX
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தில் விவசாயியான ஜாதவ் ஜாகோராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆதிலாபாத்தில் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். 6 மாதத்திற்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் தவணையாக செலுத்த வேண்டும். கடந்த இரண்டு தவணைகளை ஜாதவ் செலுத்தவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் பணத்தை கட்டுமாறு கூறியுள்ளனர்.
அந்த வங்கிக்கு சென்று அதிகாரிகள் முன்பு ஜாதவ் பூச்சி மருந்தை குடித்தார். இதனை பார்த்ததும் அதிகாரிகள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். ஆனால் விஷத்தை குடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து போராட்டம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஜாதவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஜாதவ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.