ARTICLE AD BOX

காளியம்மாள் விலகலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக சீமானின் மனைவி கயல்விழிக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் சர்ச்சைக்குரிய பதிலைச் சொல்லியுள்ளார்.
நேற்று சீமான் வீட்டில் நீலாங்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகச் சொல்லி சம்மன் ஒன்றை ஒட்டினர். இதை சீமானின் உதவியாளர்கள் கிழித்து எறிந்ததால், வீட்டிற்கு உள்ளே சென்று முறையிட முயன்றனர் போலீசார். அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த பாதுகாவலர் கையில் குண்டுகளுடன் துப்பாக்கியும் இருந்தது. உள்ளே சென்ற போலீசாரிடம் நான் சாரி கேட்டுக்கொள்கிறேன் என்று சீமானின் மனைவி கயல்விழி சொல்லிப் பார்த்தார். என்ன சாரி ? என்று கேட்டுவிட்டு பாதுகாவலரை கைது செய்து அழைத்துச் சென்றனர் போலீசார்.
முன்னாள் ராணுவ வீரரான அந்த பாதுகாவலரிடம் விசாரணை நடத்தும் போலீசார் துப்பாக்கிக்கு முறைப்படி லைசென்ஸ் உள்ளது, இந்த துப்பாக்கி எங்கு வாங்கப்பட்டது என்ற விவரங்களையும் விசாரிக்கின்றனர்
இந்நிலையில் சீமானின் மனைவி கயல்விழி, சம்மனை படிப்பதற்காகத் தான் கிழித்து வரச் சொன்னேன் என்று ஒரு அரிய தகவலைக் கூறியுள்ளார். வெளியே வருவதற்கு சங்கடமாக இருந்ததால் கிழித்து கொண்டுவரச் சொன்னேன் என்று கூறியிருக்கிறார். அவரின் உதவியாளர்கள் சம்மனை கிழிக்கும் போது கதவின் உள்பக்கம் தான் கயல்விழி இருந்ததாக வீடியோவில் தெரிந்தது.
சம்மனைப் படிக்க வேண்டும் என்றால் அதை செல்போனில் படம் பிடித்து வரச்சொல்லியிருக்கனும் தானே! அப்படியே சொல்லியிருந்தாலும் , கிழித்ததை எடுத்து வரச்சொல்லியிருக்க வேண்டுமல்லவா? ஆனால், கிழித்தவர்கள் அதை கீழே வீசத்தானே எறிந்தார்கள். பொய் சொல்வதில் சீமானை மிஞ்சிவிடுவாரோ கயல்விழி?