என்னது உங்க அக்கவுண்டுக்கு 2 ஆயிரம் வரலையா? ஷாக் ஆக வேண்டாம்! உடனே போய் ’இதனை’ செக் பண்ணுங்க!

1 day ago
ARTICLE AD BOX

என்னது உங்க அக்கவுண்டுக்கு 2 ஆயிரம் வரலையா? ஷாக் ஆக வேண்டாம்! உடனே போய் ’இதனை’ செக் பண்ணுங்க!

Chennai
oi-Rajkumar R
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 முறை தலா 2000 ரூபாய் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு அக்கவுண்டில் பணம் கிரெடிட் ஆகவில்லை என கூறப்படுகிறது. அவ்வாறு வராத விவசாயிகள், தங்கள் பெயர்களில் உள்ள வேறு அக்கவுண்ட்களில் செக் செய்து கொள்ளலாம் என்கின்றனர் அதிகாரிகள்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 6000 ரூபாயை நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

PM Kisan narendra Modi delhi

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நேரடியாக தகுதியுள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 17 தவணைகளாக விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் 2000 ரூபாய் நிதி உதவி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 19வது தவணை நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ஆம் விடுவித்தார். 19ஆவது தவணை எப்போது வெளியிடப்படும் என விவசாயிகள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் , பிஹார் மாநிலம் பகல்பூரில் நடந்த நிகழ்ச்சியில் 9.7 கோடி விவசாயிகளில் வங்கி கணக்குகளில் நேரடியாக 22,000 கோடி ரூபாய் நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில விவசாயிகளுக்கு அரசு வழங்கும் பிஎம் கிசான் ஊக்கத்தொகையான 2000 ரூபாய் வழக்கமாக பயன்படுத்தி வரப்படும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் பலரும் அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் கூட்டுறவு வங்கி கணக்குகளில் அந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

மேலும் கோ-ஆபரேட்டிவ் அல்லது வேறு வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தாலும் அதிலும் சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் அதிகாரிகள். ஆதார் எண் அடிப்படையிலேயே பணம் வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண் விவரங்களும் சரிபார்த்த பின்பு தான் பணம் வர வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே பெயர், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவை கொடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகள் இருந்தால் அதில் வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறனர். மேலும் பல விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கணக்குகளில் 2000 ரூபாய் பணம் வர வைக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு பணம் வரவில்லை என விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை.

கூட்டுறவு வங்கி கணக்குகளிலும் பிற வங்கி கணக்குகளும் சரிபார்த்தால் நிச்சயம் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கும் என்கின்றனர். ஒரு வேலை அப்படி வரவில்லை என்றால் உடனடியாக https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பயனாளிகளின் தங்கள் நிலையை அறியலாம். தொடர்ந்து உங்கள் ஆதார் எண் அல்லது பிஎம் கிசான் திட்ட எண்ணை கொடுத்தால் உங்களது தரவுகளை பெற்றுக் கொள்ளலாம். அதில் விவசாயிகள் தங்கள் மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக உள்ளதா என்றும் சரிபாத்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
English summary
PM Kisan Yojana 19th installment released; ₹20,000 crore credited to farmers. If ₹2000 hasn’t reached your account, check cooperative banks and PM Kisan portal.
Read Entire Article