ARTICLE AD BOX
என்ன கன்றாவி இது.. கோழியை புடிக்கிறன்னு கண்ட இடத்துல கை வைத்த ஹீரோ.. என்ன படம் தெரியுமா?
ஹைதராபாத்: இந்தி சினிமாவில் ரன்பீர் கபூரே நிர்வாணமாக பப்ளிக்கில் பப்பி ஷேம் என்றும் பாராமல் நடந்து வருவது போல காட்சிகளை தெலுங்கு இயக்குநர்கள் வைத்து வரும் நிலையில், தெலுங்கு படங்களில் இதுபோன்ற ஆபாசமான காட்சிகள் அதிகம் வரத்தொடங்கியுள்ளன. மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் வெளியான பணி படத்தில் நடிகை அபிநயாவின் உள்ளாடையை கழட்டி பலாத்காரம் செய்வது போன்ற காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவிய நிலையில், தற்போது கோழி பிடிக்கும் சீன் ஒன்று வைரலாகி வருகிறது.
எஸ்.ஜே. சூர்யா நயன்தாராவின் நெஞ்சில் கை வைத்து கள்வனின் காதலி படத்தின் பாடலிலேயே தாஜ்மகால் ஓவியக் காதல் என ஆட்டம் போட்டு அலற விட்டிருப்பார். கடந்த பிப்ரவரி 14ம் தேதி தமிழில் வெளியான ஃபயர் படத்தில் பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமியின் நெஞ்சில் கை வைத்து பாலாஜி முருகதாஸ் பாடல் காட்சியில் மெதுவா மெதுவா என விளையாடியதை பார்த்து அந்த படத்திற்கான பப்ளிசிட்டி ஃபயர் போல பத்திக்கிச்சு. ஓடிடியில் இந்த வாரமே வெளியிட முடியாத அளவுக்கு 5வது வாரமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக பாலாஜி முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் அதே பிப்ரவரி 14ம் தேதி இந்த ஆண்டு வெளியான 'தல' எனும் டைட்டில் கொண்ட படத்தில் தான் இப்படியொரு ஆபாசமான காட்சி இடம் பிடித்துள்ளது.
ரம்பா கோழி புடிக்கிற சீன்: 1999ம் ஆண்டு செல்வா இயக்கத்தில் பார்த்திபன், மீனா, ரம்பா, விவேக், மணிவண்ணன் நடிப்பில் வெளியான உன்னருகே நானிருந்தால் படத்தில் "சார் ரம்பா சார்" என்கிற வசனம் மற்றும் "ஒரு ஸ்வீட் கடையே ஸ்வீட் சாப்பிடுகிறதே" போன்ற காமெடி காட்சிகள் எல்லாம் இன்னமும் ரசிகர்கள் நோட் பண்ண வேண்டிய விஷயமாக இருந்தாலும் பலரும் திரும்பி திரும்பி போட்டுப் பார்க்கும் காட்சியாக ரம்பா கோழி புடிக்கும் கில்மாவான காட்சி அப்போதே படமாக்கப்பட்டிருக்கும். 25 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் அந்த கோழி புடிக்கிற சீனை சினிமா விடா என்பது போல தெலுங்கு படத்தில் ஹீரோ கோழி புடிக்கிற சீனை இயக்குநர் அம்மா ராஜசேகர் வைத்துள்ளார்.
கோழிக்கு பதிலா ஹீரோயின் மார்பு: கோழிக் கடையில் வேலை செய்துக் கொண்டிருக்கும் ஹீரோ கோழி பறந்துவிட அதை பிடிக்க வரும் போது ஹீரோயின் தடுக்கி விழ அவரது நெஞ்சு மீது அமர்ந்திருக்கும் கோழியை பிடிக்க முயற்சிக்கும் போது, கோழி பறக்கத்தானே செய்யும் அப்போ தெரியாம ஹீரோ கை மார்பின் மீது படத்தானே செய்யும் என அப்படியொரு ஆபாசமான காட்சியை இயக்குநர் அசால்ட்டாக சொருகியிருக்கிறார்.

பய புடிச்சிட்டான்: அம்மா ராகின் ராஜ், அங்கிதா நாஸ்கர் நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான 'தல' படத்தில் தான் இப்படியொரு அமர காவிய காதல் காட்சியை இயக்குநர் அம்மா ராஜசேகர் தனது மகனை ஹீரோவாக்கி அதில் வைத்து அழகு பார்த்திருக்கிறார். அந்த படத்தின் காட்சியை தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து "பய புடிச்சிட்டான்" என கேப்ஷன் போட்டு வைரலாக்கி வருகின்றனர். தூத்துக்குடி கொத்தனார் பாட்டெல்லாம் ஹிட்டாகி வரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் கூத்துகள் அரங்கேறுமோ?