ARTICLE AD BOX
நடிகை சமந்தா
நடிகை சமந்தா பல்லாவரத்து பெண் என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர்.
மாடலிங் துறையில் வெறும் ரூ. 500க்கு சம்பளமாக பெற தொடங்கி இப்போது பல கோடி சம்பளம் பெறும் நடிகையாக, பலருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக உயர்ந்துள்ளார் நடிகை சமந்தா.
நடிப்பு, தொழில் என பிஸியாக வலம் வந்தவருக்கு பெரிய தடையாக அமைந்தது மயோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு. நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் இப்போது தான் கொஞ்சம் அதில் இருந்து மீண்டுள்ளார்.
இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இவர் நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி இருந்தது.
அதிரடி
இந்நிலையில், சமந்தா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "நான் தற்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முடிக்க வேண்டும்.
அடுத்து ஒரு படம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் தொடங்கிவிடும். அதனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்பட உருவாக்கத்தில் இருந்து விலகியிருப்பதெல்லாம் முடிந்துவிட்டது. சினிமா தான் என் முதல் காதல்" என கூறியுள்ளார்.