என் மகன் விஜய்யும், நானும் எப்போதும் அப்படித்தான்…. SA சந்திரசேகர் சொன்ன முக்கியமான விஷயம்..!!

3 hours ago
ARTICLE AD BOX

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா கோலாலமாக நடைபெற்றது. மறுபக்கம் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நடித்துள்ள கூரன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் தன்னுடைய மகன் குறித்து பேசி உள்ளார். அந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் பேட்டியில் எஸ்.ஏ சந்திரசேகர் பேசியதாவது, “விஜய்யும். நானும் எப்போதுமே அப்படித்தான். அவர் ஸ்கூல் படிக்கும்போது நான் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறேன்.

நான் ரொம்ப ஸ்டிரிக்ட். விஜயும், நானும் அப்போதிலிருந்து அளவாக தான் பேசுவோம். அதை பார்த்து சிலர் இவர்கள் பேசிக்கொள்ளவில்லை, இவர்கள் இருவருக்கும் ஏதோ பிரச்சனை என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. நாங்கள் அப்போதிலிருந்தே குறைவாகத்தான் பேசிக் கொள்வோம் என்று கூறியுள்ளார். விஜய் பற்றி எஸ்.ஏ சந்திரசேகர் இவ்வாறு பேசிய நிலையில் இவர்கள் இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

Read Entire Article