ARTICLE AD BOX
என் பேரன் வந்துகூட பாக்கல.. பலமுறை கேட்டுவிட்டேன். ரோபோ சங்கர் அதிரடி பேச்சு!
சென்னை: நந்தா பெரியசாமி இயக்கத்தில்,சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் திரு மாணிக்கம். இப்படத்தில் பாரதிராஜா, வடிவுக்கரசி, நாசர், அனன்யா, சின்னி ஜெயந்த், தம்பி ராமையா என நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ரோபோ சங்கர், எனக்கு பேரன் பிறந்து இருக்கிறான். ஆனால், அவனை சமுத்திரக்கனி, இன்னும் வந்துக்கூட பார்க்கவில்லை என்று பேசியிருந்தார்,.
நந்தா பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், தமிழக கேரள எல்லையான குமுளியில் லாட்டரி சீட்டுக் கடை நடத்தி வருகிறார் சமுத்திரக்கனி. அவரிடம் ஊர், பெயர் தெரியாத முதியவரான பாரதிராஜா,.லாட்டரி சீட்டு வாங்க வருகிறார். பாரதிராஜாவிடம் இருந்த காசு தொலைந்துபோக, இந்த லாட்டரி சீட்டை எடுத்துவையுங்கள், நாளை காசு கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என பாரதிராஜா கூறிவிட்டு செல்ல,. அந்த லாட்டரி சீட்டை சமுத்திரக்கனி எடுத்துவைக்கிறார். மறுநாள், பாரதிராஜா எடுத்த வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு ரூ. 1.5 கோடி லாட்டரி விழுந்துவிட்டது

படத்தின் கதை: இந்த லாட்டரி சீட்டை பாரதிராஜாவிடம் சேர்த்துவிட வேண்டும் என சமுத்திரக்கனி கிளம்புகிறார். ஆனால், மனைவி மற்றும் உறவினர்கள் என அனைவரும், வேண்டாம் என தடுக்கின்றனர். இதன்பின் என்ன நடந்தது? அவர் சந்தித்த இன்னல்கள் எல்லாம் என்னென்ன? என்பது தான் இந்த படத்தின் கதை.. இந்த படத்தைப் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகுமார், ஆர்யா, ஐஏஎஸ் இறையன்பு, இயக்குநர் அமீர், நித்திலன் சுவாமிநாதன், கார்த்திக் சுப்பராஜ் போன்ற திரைத்துறை பிரபலங்கள் வெகுவாக புகழ்ந்தனர். இந்த படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
வெற்றி விழா: இந்நிலையில், திரு மாணிக்கம் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில், பேசிய ரோபோ சங்கர், இந்த அழகான தருணத்தில் நானும் இந்த மேடையில் இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், இந்த மேடையில் இருப்பவர்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமியுடன் சேர்ந்து நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அவர் படத்தை எப்படி இயக்குவார், ஒரு கதையை எப்படி சுவாரசியமாக கொண்டு செல்வார் என்று எனக்கு நன்றாக தெரியும்.
பேரனை பார்க்கவே இல்ல: அடுத்ததாக படத்தில் சமுத்திரகனி நடித்திருக்கிறார். அவர் என் உடன்பிறவாத சகோதரர். என் மகள் இந்திரஜா சமுத்திரக்கனியின் பெயரை பெரியப்பா என்று தான் சேவ் செய்து வைத்திருக்கிறாள். பெரியப்பா என்றால் அது, அவர் மட்டும்தான். ஆனால், இன்று வரையும் என்னுடைய பேரனை, அவர் வந்து பார்க்கவே இல்லை. கூடிய சீக்கிரம் வந்து பார்ப்பார் என்று நினைக்கிறேன். மகள் மட்டுமல்ல நானும் என்னுடைய செல்போனில் சமுத் அண்ணன் என்றுதான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் அவர் மிகவும் சமத்தான அண்ணன். ஆனால், இதுவரை நான் சமுத்திரகனிவுடன் இணைந்து படத்தில் நடித்ததே இல்லை பலமுறை அவரிடம் இது பற்றி நான் கூறி இருக்கிறேன் அவருடன் எப்படியாவது ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட வேண்டும், நிச்சயம் நடிப்பேன் என்று நடிகர் ரோபோ சங்கர் மேடையில் கலகலப்பாக பேசினார்.