ARTICLE AD BOX
சென்னை: ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்க, எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், பிருத்விராஜ் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்: பார்ட் 2’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். விவேக் பாடல்கள் எழுதியுள்ளார். வரும் 27ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது விக்ரம் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது:
படத்தை பற்றி நான் பேசுவதை விட, படம் உங்களிடம் நிறைய பேசும். ‘சித்தா’ படத்தை பார்த்த பிறகு அருண் குமார் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அதுதான் ‘வீர தீர சூரன்’. எனது ரசிகர்கள், நான் மாறுபட்ட கதைகளில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். இப்படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா ஒரு ராக் ஸ்டார்.
ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். நான் அவரது தீவிர ரசிகன். தயாரிப்பாளர் ரியா ஷிபுவின் எனர்ஜி ரொம்ப ஸ்பெஷலானது. எனக்கு எப்போதுமே ஜி.வி.பிரகாஷ் குமார் ரொம்ப லக்கி பெர்சன். இப்படத்தில் அவரது இசை, இன்னொரு கதாநாயகன் என்று சொல்லலாம். ‘வீர தீர சூரன்’ படம் எனது அன்பான ரசிகர்களுக்கானது. நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை. இது உண்மை. நான் ஒவ்வொரு விஷயத்திலும் ஈடுபடும்போது, அதை உங்களை நினைத்தே செய்கிறேன். என் தீராக்காதலே எனது ரசிகர்கள்தான்.