ARTICLE AD BOX
'என் கனவு சிதைந்துவிட்டது' - கல்வி கற்க முடியாமல் தவிக்கும் ஆப்கன் சிறுமிகள்
12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளி செல்வதை தாலிபன் அரசு கடந்த 2021-ம் ஆண்டு தடை செய்தது. எனினும், ஆமினா கல்வி கற்க வேண்டும் என்பதில் அவருடைய சகோதரர் ஹமீத் உறுதியாக உள்ளார்.
அதற்காக ஹமீத் மதரசாவை தொடங்கினார். மதரசாக்கள் மத ரீதியில் கல்வி கற்பிக்கும் மையங்களாகும். கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இங்கு மொழிகள் மற்றும் அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் சுமார் 21,000 மதரசாக்கள் செயல்படுவதாக தாலிபன் கூறுகிறது.
12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்பதற்கு மதரசாக்கள் மட்டுமே வாய்ப்பாக உள்ளன. கல்வியை கட்டுப்படுத்தி மதத்தின் மீது கவனம் குவிப்பது, பெண்களுக்கான வாய்ப்புகளை மட்டுப்படுத்தி கடும்போக்கு கொள்கையை நோக்கி நகர்த்தும் என விமர்சகர்கள் கவலைப்படுகின்றனர்.
கல்விக்கான தடையுடன் வறுமையும் அதிமாக இருப்பது, அடிப்படைவாத கொள்கைகளுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. எச்சரிக்கிறது.
எனினும், நாங்கள் பேசிய மாணவிகள் சிலர் தங்கள் வகுப்புகள் குறித்து நேர்மறையாக உள்ளனர். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றது.
பள்ளிகளை மூடினாலும் கற்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆப்கன் சிறுமிகள் உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு