எனக்கு மரண தண்டனை வேண்டாம்… தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் சஞ்சயராய் திடீர் மேல்முறையீடு..!!

2 days ago
ARTICLE AD BOX

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் பயிற்சிப் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடம்பில் ஏராளமான காயங்கள் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அந்த ஹாஸ்பிடலில் தன்னார்வ ஊழியராக பணிபுரிந்த சஞ்சய்ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட நிலையில் சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்ற நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இன்னும் சற்று நேரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது சஞ்சயராய் வழக்கறிஞர் சிபிஐ இடம் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மரண தண்டனை விதிக்கக்கூடாது எனக் கூறி மேல்முறையீடு செய்துள்ளார்.

Read Entire Article