ARTICLE AD BOX

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சுமந்த் என்பவர் என்பவர் டாக்டராக வேலை பார்க்கிறார். இவர் மரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் மரியா மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அப்போது தைராய்டு பிரச்சனை இருப்பதால் கருத்தரிக்க முடியவில்லை. உடற்பயிற்சி மையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்யுமாறு டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மரியா சங்காரெட்டி பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பயிற்சியாளரான சாமுவேல் என்பவருக்கும் மரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
சுமந்த் வீட்டில் இல்லாத போது மரியா சாமுவேலை வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சுமந்த் ரெட்டி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மரியா சாமுவேலிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து கணவரை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து சாமுவேல் தனது நண்பரான ராஜ்குமாரிடம் விஷயத்தை கூறி சுமந்தை கொலை செய்துவிட்டால் சொந்த ஊரில் வீடு கட்டி தருவதாக கூறி செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி வழக்கம் போல வேலை முடிந்து சுமந்த் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அவரது காரை ராஜ்குமாரும் சாமுவேலும் பின் தொடர்ந்து சென்றனர். இதனையடுத்து சாமுவேல் சுத்தியலால் காரின் பின்புறம் இருக்கும் இண்டிகேட்டரை உடைத்ததும் பதறிப் போய் சுமந்த் கீழே இறங்கினார். அப்போது சாமுவேல் சுத்தியலால் சுமந்தை கொடூரமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த சுமந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமந்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மரியா திட்டம் போட்டு கள்ளக்காதலனுடன் இணைந்து சுமந்தை கொலை செய்தது உறுதியானது. இதனால் மரியா, சாமுவெல், ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.