ARTICLE AD BOX
எனக்கு 20 அவருக்கு 60.. சினிமா வாழ்க்கையே போச்சு.. யார் அந்த நடிகை தெரியுமா?
சென்னை: பிரபு, ரஜினி, விஜயகாந்த், பிரசாந்த் என டாப் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. தற்போது அரசியல்வாதி, சமூக ஆர்வலர் என பல முகங்களாக இருக்கும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமீபத்தில் நடிகை ஒருவரை சீமான் ஏமாற்றியதாக வெளியான செய்திக்கு கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், தனது திரையுலக கரியர் மோசமாக காரணம் 60 வயது நடிகர் தான் என தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
அமைதிப்படை: மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை திரைப்படம் சத்யராஜிற்கு மட்டும் அல்ல கஸ்தூரிக்கு பிரேக் கொடுத்த படமாக இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு டாப் ஹீரோக்களின் படங்களிலும் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இருந்தாலும் அமைதிப்படை தாயம்மாவை யாராலும் மறக்க முடியாது. இப்படத்தில் சத்யராஜிடம் ஏமாந்து போகும் அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார். அல்வாவில் அபினை வைத்து சத்யராஜ் கஸ்தூரியை ஏமாற்றுவது போல வரும் காட்சிகள் இன்றைக்கும் டிரெண்டிங்கில் இருக்கின்றன. மத்தவங்களை பற்றி தெரியாதுங்க எனக்கு அல்வா கொடுக்க தான் தெரியுநம் என்ற டயலாக் வீடியோவாக வலம் வருகிறது.

தமிழ்படம்: சின்னத்திரையில் சீரியல்களில் தென்பட்ட கஸ்தூரி திடீரென தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாட்டிற்கு குத்தாட்டம் போட்டு ரீ என்ட்ரி கொடுத்தார். பின்பு மலை மலை படத்தில் பிரபுவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. பின்பு மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது அறை குறை ஆடையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.
கைது: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதியப்பட்டது. பின்பு தலைமறைவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து விரட்டி பிடித்த போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர். தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. நடிகையாக இருந்து கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடிப்பதில்லையா எனவும் குரல் எழுப்பினர். பினனர் ஜாமீனில் வெளியே வந்த கஸ்தூரி மன்னிப்பு கோரினார்.
ட்விட்டர் விமர்சகர்: கடந்த சில வருடங்களாக ட்விட்டரில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் கஸ்தூரி, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வது வழக்கம். அதற்கு திமுகவினரும் அவரை சரமாரியாக தாக்கி பேசுவதும் பதிலுக்கும் இவரும் சண்டை போடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. திமுக மட்டும் அல்ல, ரஜினி, கமல், விஜய் அஜித் என யாரையும் விட்டு வைக்காமல் பங்கமாய் கலாய்த்து கமாண்ட் செய்வார். இதற்கென்றே காத்திருந்த ரசிகர்கள் போல கஸ்தூரியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவார்கள். அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கோபத்துடன் வெளியேறும் காட்சிகளும் வெளியாகி சர்ச்சையானது. கஸ்தூரிக்கு ஏன் இந்த வேலை என பலரும் கேள்வி கேட்பதும் உண்டு.

கிசுகிசு: இத்தனை களேபரங்களுக்கும் நடுவில் பல யூடியூப் சேனல்களில் கஸ்தூரி பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில், தனது சினிமா கரியர் காலியானது குறித்து பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூறிய அவர், "நான் சினிமாவில் நடிச்சது 8 வருடங்கள் தான். ஒரு சின்ன கிசுகிசு வந்ததால் என் வீட்டில் நடிக்க வேண்டாம் என கூறிவிட்டார்கள். அப்போது எனக்கு 20 வயது. அந்த நடிகருக்கு அப்பவே 60 வயது இருக்கும். அவர் என்னை வைத்திருப்பதாக கிசுகிசு வந்தது.
அந்த 60 வயது நடிகர் எனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்துள்ளார். துபாயில் செட்டில் பண்ணிட்டாருன்னு கிசுகிசு வந்தது. யாருமே இதை கேள்விப்படல. ஆனா, ஒருத்தர் வந்து என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு சென்றார். அதோடு முடிஞ்சது. நடிப்பெல்லாம் வேண்டாம்னு சொல்லி பேக்கப் பண்ணிட்டாங்க என மனம் வெதும்பி கூறினார். இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த 60 வயத நடிகர் யார் மேடம் சொல்லுங்க கமெண்ட் செய்து வருகின்றனர்.