ARTICLE AD BOX
செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதி. பஞ்சமி நிலம் மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்...
ஓட்டுக்கு நோட்டு கொடுத்த உன்னால் சாதி வாரி கணக்கு எடுக்க முடியாதா?
இவர்கள் சாதிவாரி கணக்கு எடுக்க மாட்டார்கள் . அந்த உரிமை இந்திய ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. அவர்கள் தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள் இவர்கள் தான் மாநில தன்னாட்சி மாநில உரிமை என்று முழங்கியவர்கள். வீடு வாரியா ஓட்டு எவ்வளவு என எண்ணி ஓட்டுக்கு நோட்டு கொடுத்த உன்னால் சாதி வாரி கணக்கு எடுக்க முடியாதா. இந்த சாதிக்கு இந்த தொகுதியில் இவ்வளவு ஓட்டு இருக்குன்னு உனக்கு தெரியுமா தெரியாதா.
எந்தத் தகுதியும் இல்லாதவர் இந்த நிலத்திலே முதலமைச்சராக இருக்கிறார்:
இவர் நம்பர் ஒன் முதலமைச்சர். இவர் ஆட்சியில் குறை சொல்ல முடியாத ஆட்சி நடைபெற்று வருகிறது என விளம்பரப்படுத்திக் கொள்கிறார். நம்பர் ஒன் முதலமைச்சர் எதுல. எந்த தகுதியும் இல்லாத இந்த நிலத்திலே ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அதில் நம்பர் ஒன் இவர் தான். ஒரு வீரனை எதிர்க்க அருவா, கம்பை தூக்கிட்டு வருவாங்க. ஆனா, இவங்க அவதூறை தூக்கிட்டு வராங்க.
அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து போல் பெரியாரை சொல்கிறார்கள்:
ராமசாமி அவர்கள் சமூக நீதி பெற்றுக் கொடுத்திருந்தா நாங்க ஏன் முச்சந்தியில் இருந்து மூச்சுமுட்ட கத்திட்டு இருக்கோம். அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து போல் பெரியாரை சொல்கிறார்கள். அண்ணாவை பெரியார் படிக்க வைத்ததாரா. அம்பேத்கரை பெரியார் படிக்க வைத்தாரா. இரண்டு பெரிய பதவிகள் ஒன்று முதலமைச்சர் மற்றொன்று துணை முதலமைச்சர். அப்பனுக்கு மகனாக பிறந்ததால் பிறப்பால் மட்டுமே பதவி பெறுகின்றனர். இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதி துணை முதலமைச்சர் கருணாநிதி மகன் முதலமைச்சர் என்று சீமான் பேசினார்