ARTICLE AD BOX

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்றோ இந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது என்பதை இந்த இடத்தில் நான் கர்வத்தோடு சொல்லவில்லை. இது காலத்தின் கட்டளையாகும். இதனை அரசியல் வல்லுனர்களை ஆராய்ந்து கூறியுள்ளனர்.
சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் பெறுகிறார்கள். சினிமாவில் நன்றாக சம்பாதித்து விட்டு சொகுசாக வாழ்ந்து அரசியலுக்கு வருகின்றனர். அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் ஊர் ஊராய் செல்ல தேவையில்லை என்ற சொகுசு உள்ளது. அவர்களே உடனடியாக கட்சியை தொடங்கி ஆட்சி அதிகாரத்தையும் பெற முடியும். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கொள்கை பிடிப்பு எனக்கு உள்ளது. கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்கி விட முடியாது என்ற திருமாவளவன் பேசியுள்ளார்.