எட்டயபுரம் நடுவிற்பட்டியில் வீட்டுக்கு ஒரு வேகத்தடை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

23 hours ago
ARTICLE AD BOX


எட்டயபுரம்: எட்டயபுரம் நடுவிற்பட்டி சிங்காரத்தோப்பு தெருவில் வீட்டிற்கு ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகின்றனர் எனவே வேகத்தடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டயபுரம் நடுவிற்பட்டி சிங்காரத்தோப்பு தெருவின் ஒருபுறம் கழிவுநீர் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் வீடுகள் உள்ள மறுபுறம் கழிவுநீர் வாறுகால் அமைக்கப்படவில்லை எனவே வீடுகளில் இருந்து கழிவுநீர் மறுபுறமுள்ள வாறுகாலுக்கு செல்வதற்கு சாலையின் குறுக்கே குழாய் அமைத்து அதன்மீது உயரமாக சிமென்ட் மூலம் வேகத்தடை போல் கட்டியுள்ளனர். இது சற்று உயரமாக தொடர்ச்சியாக தோரணம் கட்டியதுபோல் வரிசையாக வீட்டிற்கு ஒன்றாக இருப்பதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் இந்த சாலை வழியாகத்தான் நடுவிற்பட்டியின் பல தெருக்களில் இருந்தும் பள்ளி, மார்க்கெட், மருத்துவமனை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. 100 மீட்டருக்குள் 10 வேத்தடை இருப்பதால் அவ்வழியாக பள்ளி செல்லும் மாணவர்கள் மருத்துவமனை செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வேகத்தடைகளை அகற்றிவிட்டு வீடுகள் உள்ள பகுதியிலும் கழிவுநீர் வாறுகால் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எட்டயபுரம் நடுவிற்பட்டியில் வீட்டுக்கு ஒரு வேகத்தடை: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article