ARTICLE AD BOX

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அணியை வெற்றிபெறவும் வைத்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது செய்த செயல் சர்ச்சையாக வெடித்தது.
போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 17-வது ஓவரை வீசுவதற்காக அப்ரார் அகமது வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கில் போல்ட் ஆகி வெளியேறினார். அந்த பந்து எப்படி வருகிறது என்று தெரியாமல் கணிக்க தவறிய கில் அவுட் ஆகியும் சிறிது நேரம் முழித்து பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது விக்கெட் எடுத்த உற்சாகத்தில் அப்ரார் அகமது வேகமாக கில்லை பார்த்துக்கொண்டு தனது கையை கட்டி பெவிலியனுக்கு போங்க…என்பது போல செய்கை காட்டினார். இதனால் சற்று கடுப்பான கில்லும் அவரை பார்த்தபடி பெவிலியனுக்கு திரும்பி சென்றார். அதன்பிறகு போட்டியில் விராட் கோலி அரை சதம்…சதம் விளாசி தனது செய்கை மூலம் அப்ரார் அகமதுக்கு பதிலடியும் கொடுத்திருந்தார்.
இருப்பினும், முக்கியமான ஒரு அணியில் இருந்து கொண்டு மற்ற அணியின் சக வீரரிடம் அப்ரார் அகமது இப்படி நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவருடைய செயல் தவறு என பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அப்ரார் அகமது செயல் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய வசீம் அக்ரம் “அந்த போட்டியில் அப்ரார் அகமது பந்துவீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனால், விக்கெட் எடுத்தபிறகு அவர் கொண்டாடிய அந்த கொண்டாட்டம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்படியான கொண்டாட்டம் என்பது தேவையில்லாத ஒன்று. எவ்வளவு தான் சிறப்பாக விளையாடினாலும் கொஞ்சம் பணிவாக இருப்பது தான் சிறந்த வீரருக்கு அழகு. இந்தியாவுக்கு எதிராக விளையாட்டில் போராட்டம் இருப்பது கண்டிப்பாக வேண்டும்.
ஆனால், அதற்காக இப்படி ஒரு விக்கெட் எடுத்தபிறகு கொண்டாட்டம் கோபமடை செய்யும் வகையில் செய்வீர்கள்? உங்களுடைய கொண்டாட்டம் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு கூட நல்லாயில்லை..பிறகு நேரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்கும்? என்பது போல காட்டத்துடன் தனது கேள்விகளையும் முன் வைத்தார். தொடர்ந்து பேசிய அக்ரம் ” எடுத்து 1 விக்கெட் தான் ஆனால், 5 விக்கெட் எடுத்தது போல கொண்டாட்டம் எதற்கு என புரியவில்லை எனவும் தெரிவித்தார்.