எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்

2 hours ago
ARTICLE AD BOX

எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?, என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி உருவாகாத நிலையில், தற்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

Edappadi Palaniswami naam tamilar BJP

மீண்டும் சேரும் அதிமுக - பாஜக

பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேச்சு

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதிமுக பாஜக கூட்டணி வர சான்ஸ் இல்லை. அப்படி வந்தாலும் ஒரே உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்தால் எடப்பாடிக்கு சிக்கல். இன்னும் 1 வருடம் இருக்கிறது. தினகரன் பாஜக கூட்டணிக்கு வருவார். அது எடப்பாடிக்கு சிக்கலாக மாறும். அண்ணாமலை கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்.

அண்ணாமலை பெரிய ஆள் ஆகிவிட்டார். டெல்லி சப்போர்ட் உள்ளது. அதனால் அவரை பகைக்க எடப்பாடி விரும்பவில்லை. இதனால் எடப்பாடி பாஜக கூட்டணிக்கு இறங்கி வந்துள்ளார். அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக் இருக்கிறார். அண்ணாமலையின் ஜாதி பின்புலம் இதற்கு முக்கியம் காரணம். அண்ணாமலை கவுன்சிலர் கூட இல்லை என்றாலும்.. அவருக்கு ஜாதி பலம் பெரிதாக உள்ளது .

அதனால்தான் அதிமுக தலைகள்.. எடப்பாடிக்கு பதிலாக அண்ணாமலையை திருமண விழாவிற்கு அழைக்கிறார்கள். அண்ணாமலை கவுன்சிலர் இல்லையே. ஏன் அழைக்கிறார்கள். இதுதான் காரணம். அவருக்கு பலம் இருக்கிறது. அவர் பெரிய ஆள் ஆகிவிட்டார். எடப்பாடி பலவீனம் ஆகிவிட்டார். சீமானிடம் ஏற்கனவே எடப்பாடி பலவீனமாகிவிட்டார்.

பாஜக அதிமுக கூட்டணி வைத்தால்.. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருக்க மாட்டார். மோடி அப்படி யோசிக்க மாட்டார். மோடி என்ன முட்டாளா? சீமானிடம் பலவீனம் ஆனவர் எடப்பாடி. அவரை பற்றி உளவுத்துறைக்கு தெரியாதா? மோடிக்கு இது தெரியாதா? அப்படி இருக்க எடப்பாடி எப்படி முதல்வர் வேட்பாளர் ஆவார்?

செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. சீமான் கூட முதல்வர் வேட்பாளர் ஆகலாம்.. வேலுமணி ஆகலாம்.. அண்ணாமலை ஆகலாம். சீமான் பெரிய ஆள் ஆகிவிட்டார். அவரை அதிமுக ஏற்றுக்கொள்ளுமோ கொள்வதோ.. டெல்லி அவரை கருத்தில் கொள்ளலாம். மோடி அவரை டிக் அடிக்கலாம். இன்னும் 1 வருடம் இருக்கிறது. அதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம்.

சீமான் வளர்ந்து நிற்கிறார். அதனால் அவரை ஊர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் சீமான் வளர்ந்து இருக்கிறார்.

English summary
Edappadi Palanisamy will not be the CM candidate of AIADMK - NDA says Raveendran Duraisamy
Read Entire Article