எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசிய செங்கோட்டையன்! முடிவுக்கு வரும் பனிப்போர்!

12 hours ago
ARTICLE AD BOX

Sengottaiyan vs Edappadi Palaniswami: சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது இபிஎஸ் உடன் செங்கோட்டை பேசியிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாவுள்ளது. அதாவது குரல் டிவிஷன் வாக்கெடுப்பு விதிமுறைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் செங்கோட்டையன் விளக்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதை தவிர்த்து வந்த செங்கோட்டையன் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசியிருப்பதால், அதிமுக மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பதையும், அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்த செங்கோட்டையன் இன்று குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பின் போது, அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த அதிமுகவினுடைய நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் அவர் ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார். 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்வரிசையில் செங்கோட்டையன் அமர்ந்திருக்கிறார். அவர் மூத்த உறுப்பினர் என்பதாலும்,  அவர் ஒன்பது முறை எம்எல்ஏ-வாக தேர்வாகி உள்ளதால் அவருக்கு முன்வரிசைக்கு பின்னாடி இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இன்றைக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றபோது, தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர், "அனைத்து எம்எல்ஏக்களையும் பார்த்து இரண்டு முறை குரல் வாக்கெடுப்பு நடக்கும், அதன் பிறகு டிவிஷன் முறை நடைபெறும்" என அறிவித்தார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எப்படி வாக்களிக்கணும் என்ற முறை குறித்து பல புதிய அதிமுக எம்எல்ஏக்களுக்கு தெரியவில்லை. ஆனால் இது போன்ற சபை நடவடிக்கைகளில் செங்கோட்டையன் பங்கேற்று இருந்ததால், இதனையடுத்து "முதலில் இரண்டு குரல் வாக்கெடுப்பு நடத்துவாங்க,  அதன்பிறகு தான் டிவிஷன் என்று சொல்லக்கூடிய எண்ணிக்கணிக்கை முறைக்கு போவார்கள்" எனக் கூறினார். 

ஆனால் அது மற்ற எம்எல்ஏக்கள் யாருக்கும் சரியாக கேட்கவில்லை. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகில் சென்று அவரின் காதில் போய் கூறினார். மேலும் இந்த மாதிரி நடைமுறையின் போது நாம் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதன்பிறகு உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் ஆசுவாசப்படுத்தினார். "அனைவரும் அமருங்கள்" செங்கோட்டையன் சொல்கிறார். அவர் வந்து மூத்த உறுப்பினர் அவருக்கு தெரியும், அமைதியாக இருங்கள் என்று சொன்னார். 

எனவே மூன்றாவதாக தான் எண்ணிக்கணித்தல் முறை நடைபெறும் என்பது குறித்து செங்கோட்டியன் சொன்ன ஆலோசனையை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். மேலும் இன்றைக்கு வழக்கமாக ஒரு இணக்கமான சூழலோடு செங்கோட்டையன் மற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட இருந்தார். இதன்மூலம் இரண்டு தலைவர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் இருப்பதை உணரமுடிகிறது. 

மேலும் படிக்க - LIVE தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.. இன்றைய முக்கிய செய்திகள்!

மேலும் படிக்க - படத்திற்கு வில்லன் தேவைப்படும் போது, அரசியலில் இருக்காதா? - தாடி பாலாஜி!

மேலும் படிக்க - 'பட்ஜெட்டும் ஹிட்... தமிழும் ஹிட்...' லோகோவில் 'ரூ' போட்டது ஏன்? ஸ்டாலின் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article