எச்சரிக்கை!!! வேர்கடலையை இப்படி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும்..

2 days ago
ARTICLE AD BOX

வேர்கடலையை பச்சையாக உண்பதால் வயிற்றில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.

வேர்க்கடலையில் இருக்கும் நன்மை தீமைகளை பற்றி விளக்கம் அளித்துள்ள மருத்துவர் மைதிலி அவற்றை எப்படி உண்ண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வேர்க்கடலையை பச்சையாக ஓடு உடைத்து உண்பது, எண்ணையில் பொறித்து உண்பது, வேகவைத்து உண்பது என பலவகையில் மக்கள் உட்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய மருத்துவர் மைதிலி, வேர்க்கடலையை பச்சையாக உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரித்துள்ளார்.

பச்சை வேர்க்கடலையில் பூஞ்சைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை வேகவைக்காமல் உட்கொள்ளும் போது வயிற்றில் புற்றுநோய் கட்டி உருவாகும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். வேர்க்கடலையை கட்டயாமாக வேகவைத்து தான் உண்ண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வேர்க்கடலையில் இருக்கும் அமினோ அமிலங்கள் நம் மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன் மூளை நரம்புகளை தூண்டக்கூடிய செரோடினினை சீராக பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. வேர்க்கடலையில் விட்டமின் பி 3 என்ற ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது. இதனால் ஞாபகசக்தி அதிகரிப்பதுடன் வயதான பிறகு உண்டாகும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டது எனவும் மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.

Read more: உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் அற்புத பானம்; கண்டிப்பா இதை ஒரு முறை குடிச்சு பாருங்க.

The post எச்சரிக்கை!!! வேர்கடலையை இப்படி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article