ARTICLE AD BOX
நாகர்கோவில்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 12.12 மணிக்கு கன்னியாகுமரி சென்று விட்டு 12.45மணிக்கு காலி பெட்டிகளுடன், சுத்தம் செய்யும் பணிகளுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்தது. ரயிலில் லோகோ பைலட் மோகனன் என்பவருடன், பிரதீப் என்பவர் உதவி லோகோ பைலட்டாக பணியில் இருந்தார்.
மோகனன் கீழே இறங்கிய நிலையில் பிரதீப் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரயில் இன்ஜின் அறையில் மயங்கி சரிந்தார். உடனே அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் இறந்து விட்டதாக கூறினர்.
The post எக்ஸ்பிரஸ் ரயிலில் லோகோ பைலட் மாரடைப்பால் பலி appeared first on Dinakaran.