ARTICLE AD BOX
ஊடகங்களில் தீர்மானிக்கின்ற இடங்களில் தமிழர்கள் இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லாததால் தான் விஜய் டிவியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் மும்மொழி கொள்கை தொடர்பான நீயா நானா விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாஜக நிர்வாகியான அலிஷா அப்துல்லா, ஒட்டு மொத்த நீயா நானா நிகழ்ச்சியே திமுகவின் அறிவுறுத்தலின் படி நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். தன்னை கலந்துகொள்ள அழைத்தபோது தவிர்த்துவிட்டதாகவும் கூயுள்ளார். தமிழர்களின் மனநிலை என்பது இருமொழி கொள்கைதான். இவர்கள் விஜய் டிவி மீதும், கோபிநாத் மீதும் திசை திருப்பிவிட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள். கேட்டால் திமுக நடத்துகிற நிகழ்ச்சி என்கிறார்கள். வாதம் பிரதிவாதம் வைக்க முடியாவிட்டால் நீ திமுககாரன், நீ உ.பி. என்று எதையாவது உளறுவார்கள். நீயா நானாவில் பங்கேற்றவர்கள் திமுக உறுப்பினர்களா? அவர்கள் திமுகவில் மாவட்ட செயலாளர்களாக உள்ளனரா? அவர்கள் இந்த கொள்கையால் பெற்ற நன்மைகளை சொல்கிறான். அதை காது கொடுத்து கேட்காமலேயே நீ இந்தி படித்திருக்கலாமே, பக்கத்து மாநிலத்திற்கு சென்று பிழைத்திருக்கலாமே என்று சொல்கிறார்கள்.
டேய் தமிழன் ஏன் பக்கத்து மாநிலத்திற்கு சென்று பிழைக்க வேண்டும்?. அவன் பக்கத்து நாட்டிற்கு போகிற அளவுக்கு முன்னேறிவிட்டான். தமிழ்நாட்டுக்காரன் யாருக்காவது பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என ஆசை வருமா? நேபாளத்திற்கு போக வேண்டும் என ஆசை வருமா? ஆனால் வட இந்தியர்களின் அதிகபட்ச ஆசையே நேபாளளத்திற்கு போக வேண்டும், ஆப்கானிஸ்தானுக்கு போக வேண்டும் என்பது தான். அதை விட்டால் அவர்களுக்கு சூப்பர் நாடு தமிழ்நாடுதான். ஆனால் தமிழ்நாட்டுக்காரன் போனால் அமெரிக்கா, லண்டன் போவான், சிங்கப்பூர் போவான். வளைகுடா நாடுகளுக்குக் கூட உயர் பதவிகளுக்கு தான் போவார். கேரளாவில் இருந்து செவிலியிர்கள்தான் போவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து பொறியாளர்கள், மருத்துவர்கள் செல்வார்கள்.
ஒரு தமிழன், ஒரு மலையாளி, ஒரு பெங்காலி இப்படி அனைத்து இனத்தவரின் அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும். இந்த நேரத்தில் ஒரு தமிழனாக நான் என்ன கேட்கிறேன் என்றால்? என் தமிழ் மண்ணில் தமிழர்களை மூலதனமாக கொண்டு இயங்குகின்ற ஊடங்களில், தீர்மானிக்கிற இடத்தில் தமிழர்கள் வேண்டும் என்று நான் கேட்கிறேன். நான் இன்று நீயா நானாவை பாஜக நிறுத்திவிட்டது என்று கேட்கவில்லை. இன்று பாஜக. நாளை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எனக்கு முதலில் நிகழ்ச்சியை நிறுத்தியவர் யார் என்று தெரியவில்லையே. அந்த புரொடக்ஷன் நிறுவனத்தில் இருந்து சொல்கிறார்கள். விஜய் டிவியில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட தெரியாது. உசிலம்பட்டிக்ககாரனுக்கு என்ன தேவை? திருப்பூர்க்காரனுக்கு என்ன தேவை என்று கோபியும், ஆண்டனியும் பார்த்து பார்த்து நிகழ்ச்சியை நடத்தனார்கள். காரணம் அவர்கள் தமிழர்கள். ஆனால் அர்னாப் கோஸ்வாமி போன்ற நபர் நடத்தி இருந்தால் எப்படி செய்திருப்பார்கள்?. நான் ஒரு தமிழனாக மட்டும் பேசவில்லை. மனிதனாக பேசுகிறேன். ஒரு தமிழனை தீர்மானிக்கும் இடத்தில் மலையாளியோ, மார்வாடியோ இருக்கக்கூடாது என்கிறேன். ஒரு பாமரனாக கேட்கிறேன் நாமக்கலில் ரோடு சரியில்லை என்று தீர்மானிப்பதற்கு எதற்கு நாக்பூர்காரன் என்கிறேன். அந்த அரசியல்தான் இன்று விஜய் டிவியில் இறங்கி விட்டது. அடுத்து நிகழ்ச்சிக்காக கண்டென்ட்டுகளை அவர்கள் கொடுத்தால் எப்படி இருக்கும்?. இன்று அரசியல் அறிவு இல்லாத 2கே கிட்ஸ்கள் நீயா நானா பார்த்துதான் அரசியலை கற்றுக்கொள்கின்றனர். அந்த நிகழ்ச்சி பாதிக்கப்பட்டால் என்னவாது?
தேசிய இனங்களை ஒடுக்குவதும், கார்ப்பரேட் அரசியலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையதாகும். ஏற்கனவே இருந்த இந்தியாவில் தேசிய இனங்களுக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழன், தெலுங்கானா, காஷ்மீர், மராத்தி என அனைத்து தேசிய இனங்களும், இங்கு இந்தி என்ற மாயைக்குள் சிக்கிக் கொண்டுள்ளன. அதை எதிர்த்து போராடிய அறிவும், விழிப்புணர்வும் தமிழ்நாட்டிற்கு 100 வருஷத்துக்கு முன்பாகவே பெரியார் கொடுத்துவிட்டார். மற்ற மாநிலங்களுக்கு அந்தளவிற்கு வரவில்லை. அவர்கள் இப்போதுதான் விழித்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே தேசிய இனங்களையும், அதன் அடையாளங்களையும் அழிக்கும் ஏக இந்தியா அமைப்பு, டெல்லி 100 வருடமாக செய்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு மொழியே இருக்கக் கூடாது என்பதுதான் எண்ணம். அவர்களுக்கு சந்தை பெரியதாக இருக்க வேண்டும். அவர்கள் உள்ளுர் பிரச்சினைகள் குறித்து யோசிக்க மாட்டார்கள். இவை இரண்டும் சேரும்போது அடிப்படையில் நமது மொழி, பண்பாடு, மாநில உணர்வு போன்ற எல்லாம் சூறையாடப்படுகிற ஆபத்தும் உள்ளது.
விஜய் டிவியில் பிரியாங்கா – மணிமேகலை விவகாரத்தில் இது வெளிப்பட்டது. இந்த இடத்தில் தமிழர் என்பதால் மணிமேகலை ஒதுக்கப்பட்டார். பிற மொழியினருக்கு, பிற மாநிலத்தவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஏனென்று பார்த்தால் அது தயாரிப்பு நிறுவனத்திடம் உள்ளது. அதன் தலைமை பொறுப்பில் வேறு மாநிலத்தவர்கள் தான் உள்ளனர். இந்த விவகாரம் இன்று தொடங்கவில்லை. ஊடகங்களில் தீர்மானிக்கின்ற இடங்களில் தமிழர்கள் இருக்க வேண்டும். விவாதம் நடத்துகின்ற இடத்தில் தமிழர்கள் இருக்க வேண்டும். நியூஸ் 7, நியூஸ் 18 போன்ற அனைத்து இடங்களிலும் நெறிப்படுத்துகிற இடத்தில் தமிழர்கள் வந்துவிட்டனர். ஒரு காலத்தில் கருத்து சொல்கிற இடத்தில் தமிழர்களை விட மாட்டார்கள். இன்று அனைத்து சேனல்களிலும் தமிழர்கள் வந்துவிட்டார்கள் என்கிறபோது அவர்களுக்கு ஆத்திரம் ஆகிறது. அதனால்தான்