ARTICLE AD BOX

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே என் நேரு, நான் இந்த கூட்டத்தில் வரப்போகும் தேர்தல் பற்றி உங்களிடம் அதிகமாக பேச நினைக்கின்றேன். வரும் வழியில் தான் ஒரு பரபரப்பான செய்தியை அறிந்தேன். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அரசியல் வியூக அமைப்பாளராக பிரஷாந்த் கிஷோர் மேடையில் பேச உள்ளார் என்று கூறினார்கள். என்னை பொறுத்தவரையில் பிரசாந்த் கிஷோர் உள்ளூரில் விலை போகாதவர்.
அவருடைய ஜன் சூராஜ் கட்சி பீகாரில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெபாசிட் கூட வாங்கவில்லை. இப்படியான நிலையில் அவர் விஜயின் வெற்றி குறித்து பேசுகின்றார். முன்பு திமுகவுக்கு வேலை செய்த அவர் இன்று விஜயின் கட்சிக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. இவர்களை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நன்கு அறிவார். இந்த தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். முதலமைச்சர் கூறும் அனைத்து விஷயங்களையும் நாம் பின்பற்றினால் போதும் என்று கே என் நேரு தெரிவித்துள்ளார்.