ARTICLE AD BOX
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை அமைக்க கூடுதலாக ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தரம், கோவிந்தராஜலு, குணசீலன், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம் செரியன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் அலுவல் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். போளூர் – செங்கம் சாலையை 4 வழிச்சாலையாக்க போக்குவரத்து செறிவு கணக்கெடுக்கப்பட வேண்டும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு; போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பு பணி இந்த ஆண்டே தொடங்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை அமைக்க கூடுதலாக ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
போளூர் – ஜமுனாமுத்தூர் சாலையை விரிவுபடுத்த ரூ.14 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என்று கூறினார். அதனை தொடர்ந்து ஈரோடு கோபிச்செட்டிபாளையம் புறவழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என செங்கோட்டையன் விடுத்தார். மானியக் கோரிக்கையின்போது செங்கோட்டையன் விரும்பும் பதிலை கூறுகிறேன் என அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.
The post உள்ளாட்சி அமைப்புகளில் சாலை அமைக்க கூடுதலாக ரூ.900 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.