உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை – ஆர்யா, மஞ்சு வாரியரின் மிஸ்டர் எக்ஸ் டீசர் வெளியீடு!

2 days ago
ARTICLE AD BOX

Mr X Movie Teaser Released : மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், ரைசா வில்சன், அதுல்யா ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மிஸ்ட்ர எக்ஸ். இந்திய உளவுத்துறை வீரர்களின் வாழ்க்கை மற்றும் தியாகங்களில் உருவான கதை தான் மிஸ்டர் எக்ஸ். முழுக்க முழுக்க ஆக்‌ஷனை மையப்படுத்தி மிஸ்டர் எக்ஸ் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Entire Article