உலகின் முதல் 33000mAh பேட்டரி + ப்ரொஜெக்டர் கொண்ட போன்.. மாஸ் கிளப்பும் Oukitel ரக்டு மொபைல்.. எந்த மாடல்?

3 hours ago
ARTICLE AD BOX

உலகின் முதல் 33000mAh பேட்டரி + ப்ரொஜெக்டர் கொண்ட போன்.. மாஸ் கிளப்பும் Oukitel ரக்டு மொபைல்.. எந்த மாடல்?

News
oi-Sharath Chandar
| Published: Wednesday, January 22, 2025, 18:46 [IST]

யுக்கிடேல் (Oukitel) நிறுவனம் தற்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில் புதிய யுக்கிடேல் WP100 டைட்டன் (Oukitel WP100 Titan) என்ற ரக்டு ஸ்மார்ட்போன் (rugged smartphone) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது உலகின் முதல் ப்ரொஜெக்டர் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனாக அறிமுகம் (world's first smartphone with projector) செய்யப்பட்டுள்ளது. என்னது? போன்ல ப்ரொஜெக்டரா? என்று நீங்கள் ஆச்சரியமாக கேட்பது எங்களுக்கு இங்கே கேட்கிறது. உண்மையிலேயே போனில் ப்ரொஜெக்டர் உடன் 33,000mAh பேட்டரி போனாக (33,000mAh battery phone) இந்த சாதனம் அறிமுகமாகியுள்ளது என்ற மற்றொரு தகவலையும் சேர்த்து உங்களுக்கு வழங்குகிறோம்.

என்னது ஸ்மார்ட்போனுக்கு 33,000mAh பேட்டரியா? (33000mAh battery) என்று நீங்கள் வாய்பிளந்தால், இதுவும் மறுக்க முடியாத உண்மை தான் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம். இதுக்கே இப்படியா? இன்னும் இந்த புதிய யுக்கிடேல் WP100 டைட்டன் (Oukitel WP100 Titan) போனில் என்னவெல்லாம் இருக்கிறதென்று தெரிந்துகொள்ள, இந்த பதிவு மேலும் தொடர்ந்து படியுங்கள். இது ப்ரொஜெக்டர் (mobile projector) மற்றும் ஸ்மார்ட்போன் (smartphone) என்று இரண்டு சாதனமாக பயன்படுத்த அனுமதிக்கிறது.

உலகின் முதல் 33000mAh பேட்டரி + ப்ரொஜெக்டர் கொண்ட போன்.. மஹா மாஸ்..

உலகின் முதல் 33000mAh பேட்டரி + ப்ரொஜெக்டர் கொண்ட Oukitel WP100 Titan போன்:

யுக்கிடேல் WP100 டைட்டன் ரக்டு ஸ்மார்ட்போன் (Oukitel WP100 Titan Rugged Smartphone) சாதனத்தை யுக்கிடேல் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற CES 2025 நிகழ்வில் தான் அறிமுகம் செய்தது. இந்த போனுடன் நிறுவனம் கூடுதலாக இன்னும் இரண்டு விதியசமான ரக்டு ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை Oukitel WP200 Pro மற்றும் Oukitel WP300 பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய Oukitel WP100 Titan ஸ்மார்ட்போன் சாதனம் பில்ட் இன் ப்ரொஜெக்டர் (built-in projector) சாதனத்துடன் வருகிறது. இந்த புதிய யுக்கிடேல் ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் 33,000mAh திறன் கொண்ட பேட்டரி அம்சத்தையும் கொண்டுள்ளது. உலகின் முதல் 33,000mAh பேட்டரியுடன் போனில் ப்ரொஜெக்டர் அம்சத்துடன் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள முதல் ரக்டு ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யுக்கிடேல் WP100 டைட்டன் ரக்டு ஸ்மார்ட்போன் (Oukitel WP100 Titan Rugged Smartphone):

இந்த புதிய Oukitel WP100 Titan ஸ்மார்ட்போன் சாதனம் 100 லூமென்ஸ் பிரைட்னஸ் (100 lumen brightness) உடன் விஷுவலை ப்ரொஜெக்டர் மூலம் ப்ராஜெக்ட் செய்கிறது. இது எந்தவிதமான பரப்பிலும் வீடியோவை மிகவும் துல்லியமாக ப்ராஜெக்ட் செய்யும் ஸ்பெஷல் அம்சத்தை கொண்டுள்ளது. இருப்பினும் இது 100 லுமென்ஸ் பிரகாசம் கொண்ட இருளான இடங்களில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. இதில் 1200 லுமென்ஸ் பிரைட்னஸ் கொண்ட கேம்ப் லைட் (camp light) உள்ளது. இந்த Oukitel WP100 Titan ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் (chipset) உடன் வருகிறது.

இந்த ரக்டு ஸ்மார்ட்போன் சாதனம் இந்த சிப்செட் உடன் சிறந்த பெர்பார்மென்ஸை வழங்குகிறது. இந்த புதிய யுக்கிடேல் WP100 டைட்டன் ரக்டு ஸ்மார்ட்போன் 16GB ரேம் (RAM) உடன் 512GB ஸ்டோரேஜ் (storage) ஆதரவை பெறுகிறது. இது 200MP மெயின் ரியர் கேமராவுடன் 20MP நைட் விஷன் கேமராவை (night vision camera) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த சாதனம் 32MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது 6.8" இன்ச் அளவு கொண்ட 120Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) உடைய டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது.

யுக்கிடேல் WP100 டைட்டன் விலை (Oukitel WP100 Titan Price):

Oukitel WP100 Titan ரக்டு ஸ்மார்ட்போன் தானம் -20°C முதல் +55°C வரையிலான வெப்பநிலையில் (temperature) பயன்படுத்தும் வகையில் மிகவும் முரட்டுத்தனமான ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது 66W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) 33,000mAh பேட்டரி உடன் வருவதினால், இதில் உள்ள 18W ரிவர்ஸ் சார்ஜிங் (reverse charging) அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் மற்ற சாதனங்களையும் கூட சார்ஜ் செய்துகொள்ளலாம். ஆம், இதை நீங்கள் ஒரு பவர் பேங்க் சாதனமாகவும் பயன்படுத்தலாம். இதன் அறிமுக சலுகை விலை $599 டாலர் ஆகும். இந்தியா மதிப்பில் இது ரூ.51,768 விலை (price) மட்டுமே. சலுகை இல்லாமல் இதன் விலை $899 ஆகும்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Oukitel WP100 Titan Rugged Smartphone With Projector and 33000mAh Battery Check Price
Read Entire Article