உலகின் மிகப்பெரிய கால்பந்து மைதானம்.. மான்செஸ்டர் யுனைடெட் திட்டம்!

14 hours ago
ARTICLE AD BOX
Published on: 
11 Mar 2025, 5:20 pm

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமையவுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 இருக்கைகள் கொண்ட புதிய மைதானத்திற்கான திட்டங்களை மான்செஸ்டர் யுனைடெட் கிளப் வெளியிட்டுள்ளது. இது இங்கிலாந்தில் ஏற்கெனவே இருக்கும் 90,000 இருக்கைகளைக் கொண்ட வெம்பிளி மைதானத்தை விஞ்சும் அளவில் அமைக்கப்படவுள்ளது.

இந்த மைதான கட்டுமானத்துக்கு மொத்தமாக 2 பில்லியன் யூரோ வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், மைதான கட்டுமானத்திற்கான முழுச் செலவையோ, காலக்கெடுவையோ யுனைடெட் வெளியிடவில்லை. ஆனால் கட்டடக் கலைஞர் நார்மன் ஃபாஸ்டர் கட்டுமானப் பணிகளுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

manchester united confirm plans to build the worlds greatest football ground
manchesterx page

பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ராட்க்ளிஃப் கடந்த ஆண்டு யுனைடெட்டில் ஆரம்ப 25% பங்குகளுக்கு டாலர் 1.3 பில்லியனை செலுத்தி்யுள்ளார். இந்த திட்டத்திற்கு இங்கிலாந்து அரசாங்கம் ஏற்கெனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது, இருப்பினும் இது எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அந்த வகையில், இந்த மைதான கட்டுமான பணியில் சுமார் 92,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய மைதானம் உலகின் மிகச்சிறந்த கால்பந்து மைதானமாக இருக்கும் என்று மைதானத்தின் இணை உரிமையாளர் ஜிம் ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதிய மைதான கட்டுமானத்தின்போது மான்செஸ்டர் வீரர்கள் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்திலேயே விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 116 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஓல்ட் டிராஃபோர்டை மறுவடிவமைப்பதா என்பதை மான்செஸ்டர் யுனைடெட் முன்னதாக ஆராய்ந்து வந்தது. ஆனால் இப்போது பழைய மைதானத்திற்கு பதிலாக புதிய மைதானத்தை கட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய மைதானமாக வெம்பிளி உள்ளது. இது 90,000 பேர் அமரக்கூடியது, மேலும் இது இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அணியின் தாயகமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்து, தேசிய ரக்பி அணியின் தாயகமான ட்விக்கன்ஹாம் மைதானம் விளங்குகிறது. இங்கு, 82,500 பேர் அமர முடியும். அடுத்து, ஓல்ட் டிராஃபோர்டு நாட்டின் மிகப்பெரிய அர்ப்பணிக்கப்பட்ட கால்பந்து மைதானமாகும். இ்ங்கு 74,000 பேர் அமரக்கூடிய வசதியைக் கொண்டது.

manchester united confirm plans to build the worlds greatest football ground
கினியா | ரத்த குளமாக மாறிய கால்பந்து மைதானம்! ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 100 பேர் பலி!
Read Entire Article