ARTICLE AD BOX
ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அனிமே தொடர்களின் அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்.
உலகம் முழுக்க அனிமே தொடர்களுக்கென சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் காமிக்ஸ் மற்றும் அனிமே தொடர்களில் புகழ்பெற்ற ஒன் பீஸ், நருட்டோ ஷிப்புடென், பொருட்டோ போன்ற கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த ஜப்பானிய அனிமேட்டரும் இயக்குநருமான ஷிகேகி அவாய் (71) நேற்று (மார்ச் 19) காலமானார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனிமே துறையில் இவர் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற பல அனிமே தொடர்களுக்கு அனிமேட்டராக இருந்த இவர் 500-க்கும் மேற்பட்ட அனிமேக்களில் பங்களித்துள்ளார்.
இதையும் படிக்க | எம்புரான் டிரைலர்!
மேலும், ஒன் பஞ்ச் மேன், பைபிளேடு, ஃபுட் வார், டோக்கியோ அண்டர்கிரௌண்ட் ஆகிய அனிமே தொடர்களை இயக்கியுள்ளார். அட்டாக் ஆன் டைட்டன்ஸ் தொடரிலும் சில அத்தியாயங்களில் அனிமேட்டராக பணியாற்றினார்.
இவரது மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள அனிமே ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவர் இறப்பதற்கு முன்பு தி மிஸ்ஃபிட் ஆஃப் டீமன் கிங் - 2, உசுமாகி, டெர்மினேட்டர் ஜீரோ, சூசைடு ஸ்குவாட் போன்ற தொடர்களில் அனிமேட்டராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.