ARTICLE AD BOX
சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பாலகிருஷ்ணன் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமை பணி தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பை தமிழ்நாட்டையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812ல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாக தந்தார். அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.