ARTICLE AD BOX

இன்று22.03.2025 சனிக்கிழமை உலக தண்ணீர் நாள் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.. ஐக்கிய நாடுகள் அவையால் தீர்மானம் செய்யப்பட்டு, கடந்த1993 ஆம் ஆண்டு முதல் மார்ச்-22 ஆம் தேதியை, உலக தண்ணீர் நாளாக கொண்டாடிவருகிறோமே தவிர, ஒவ்வொரு மனிதரிடமும் தண்ணீரை சிக்கனமாக கையாள்வது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு மட்டுமல்ல, பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும், உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். நீர் வளத்தை காப்பதும், அதனை பெருக்குவதும், மக்கள் கைகளில்தான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே உலக தண்ணீர் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் வாழும், அனைத்து மக்களும், இந்த இனிய நாளில் தண்ணீரை" உயிர் போல் காப்போம்'' என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமாறு, நான் கேட்டுக் கொள்வதுடன், அனைவருக்கும் " உலக தண்ணீர் நாள்'' நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். " சிறுதுளி பெரு வெள்ளம் " வாழ்க வளமுடன்...
- கோ ராமகிருஷ்ணன்
மக்கள் பொது நல சேவகர்,
பாசார் கிராமம், வாணாபுரம் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், 6381296314