உலக அழகியாவே இருந்தாலும் இதான் நிலைமை போல.. இணையத்தில் வைரலாகும் அபிஷேக் பச்சன் பேச்சு

6 hours ago
ARTICLE AD BOX

ஐ வான்ட் டூ டாக் படத்திற்கான அபிஷேக் பச்சன் விருது பெற்றார். அந்த சமயத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் கபூர் கேட்ட கேள்விக்கு அபிஷேக் பச்சன் கொடுத்த பதில் பலரையும் சிரிக்க வைத்தது.

மனைவியிடமிருந்து அழைப்பு

இந்த வாரம் நடைபெற்ற ரீல் ஷோஷா விருதுகளில், ஐ வான்ட் டூ டாக் படத்திற்காக அபிஷேக் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். விருதைப் பெற்ற பிறகு, தொகுப்பாளர் அர்ஜுன் கபூர் விளையாட்டாக அபிஷேக்கிடம், “யாருடைய ‘பேசணும்’ன்னு சொல்ற அழைப்பு உங்களுக்கு டென்ஷனை கொடுக்குது?”ன்னு கேட்டார்.

அபிஷேக் சிரித்துக் கொண்டே, “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே… ஆனாச்சுன்னா உனக்குப் புரியும்”ன்னு சொன்னார். பிறகு, மனைவி ஐஸ்வர்யா ராஜ் என்று பெயர் சொல்லாமல், “மனைவி ‘பேசணும்’ன்னு சொல்லி கூப்பிட்டா, சிரமத்துல மாட்டிக்கிட்டோம்ன்னு அர்த்தம்!”ன்னு சொன்னார்.

பி ஹேப்பி படம்

அபிஷேக்கின் சமீபத்திய வெளியீடான ‘பி ஹேப்பி’ படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த தந்தை-மகள் கதையில் இனாயத் வர்மா, நோரா ஃபதேஹி மற்றும் நசர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ரெமோ டிசோசா இயக்கிய ‘பி ஹேப்பி’ திரைப்படம், மகளின் கனவை நிறைவேற்ற நடனம் கற்றுக்கொள்ள வேண்டிய தந்தையின் கதையைச் சொல்கிறது.

நிஜத்தில் அப்படி இல்லை

ஆனால் அவரது நிஜ வாழ்க்கை மகள் அவரை அப்படி ஒரு சூழ்நிலையில் வைக்கவில்லை என்கிறார். "எனது வசதிக்கு அப்பாற்பட்ட எதையும் செய்ய வேண்டிய சூழ்நிலை எதுவும் இல்லை. ‘இது எனக்கு வசதியானது இல்லை, ஆனால் என் பிள்ளைக்காக இதை செய்ய வேண்டும்’ என்று உணர்ந்தது இல்லை. இதுவரை, நான் அந்த சூழ்நிலையில் வைக்கப்படவில்லை, அதற்கு நன்றி," என்று முன்னதாக அவர் பேசி இருந்தார்.

அபிஷேக் பச்சன் குடும்பம்

அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா 17 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருக்கின்றனர். அவர்களுக்கு 13 வயதில் மகள் ஆராத்யா இருக்கிறாள். சமீபத்திய ஒரு பேட்டியில், அபிஷேக் தனது மகளுடனான உறவைப் பற்றி பேசினார். “வீட்ல நான் ஒரு அப்பா. நான் ஒரு பிரபலம் இல்ல, ஒரு அப்பா மட்டும்தான். இது ஒரு ரியாலிட்டி செக் இல்ல, உண்மையான இடத்திலிருந்து வர்ற அன்புன்னு நினைக்கிறேன்”ன்னு அவர் சொன்னார்.

விவாகரத்து வதந்திகள்

2024 ஜூலை மாதம் அனந்த் அம்பானியின் திருமணத்தின் போது ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பத்திற்கு இடையேயான மோதல் குறித்த வதந்திகள் பரவியது. ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் தனித்தனியாக திருமண நிகழ்ச்சிக்கு வந்ததால் இந்த வதந்தி பரவியது. ஆனால், இந்த ஜோடி அதை பொருட்படுத்தாமல், ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அந்த வதந்திகளை மெதுவாக மறுக்கின்றனர்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article