உற்சாகமாக முதுமையை எதிர்கொள்ளுங்கள் : முதுமையில் ஆனந்தமாக வாழ்வோம்..!!

6 hours ago
ARTICLE AD BOX

ஒருவர் 50 வயதை தாண்டும் போது தன் வாழ்வில் அதிகபட்சமாக சம்பாதிக்கும் வாய்ப்பு பெறுகிறார் அதனை ஆண்டுகள் அனுபவத்திற்காக கிடைக்கும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் அறிவுரை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. குடும்ப பொறுப்புகளும் அப்போதுதான் அதிகமாகும் அத்தனை பொறுப்புகளில் சுமைகளையும் தாங்கிக் கொண்டு பம்பரமாக சொல்ல வேண்டி இருக்கும் மனதின் வேகத்துக்கு உடல் ஈடு கொடுக்காது….

அந்த வயதுக்குரிய உடல் உபாதைகள் ஒவ்வொன்றாக தலை தூக்க ஆரம்பிக்கும் பரபரப்பாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஓய்வு வயதை நெருங்கும். அலை கழிக்கும் உடல் நோய்கள் அதுவரை இருந்த முக்கியத்துவங்கள் குறைந்து அதனால் வரும் மனசோர்வு மோசமான அனுபவங்களால் ஏற்படும் மன தளர்வு என்று எல்லாவற்றையும் சமாளித்து மன உறுதியுடன் மீண்டும் வர வேண்டிய காலம் இது. மனிதர்களின் இயல்பிலேயே சுதந்திர உணர்வு இருக்கிறது நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் போக முடிவதை விட பெரிய சுதந்திரம் வேறு கிடையாது. உடலும் மனமும் தளர ஆரம்பித்து விட்டதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் கடமைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு அனுபவங்களை ஏராளமாக சேமித்துக் கொண்டு நிமிடம் போது ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் நிலையே இந்த வயோதிகம். இந்த வயதில் எப்படி இருந்தாலும் மனதை இளமையாக வைத்துக் கொண்டால் உற்சாகமாக முதுமை எதிர்கொள்ள முடியும். உடலுக்கு மட்டுமே முதுமை என்ற மாற்றம் வாழ்க்கையில் மறந்து போன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுகள் கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கும் தயாராகும் போது மனது இளமையாகிறது. அப்படி அல்லாமல் நான்கு சுவர்களுள் அடைய பட்டு கம்பி கதவுகளுக்கு வெளியில் தெரியும் ஒரு வராண்டாவை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதை விட மோசமான தண்டனை இல்லை எவரையும் அது நொருங்க செய்துவிடும். கற்பனையாக ஏதேதோ நினைத்துக் கொண்டு தங்களை பலவீனமான மனிதர்களாகவும் திறமையற்ற வர்களாகவும், கற்பனை செய்து கொண்டு கனவு சிறை ஒன்றில் தங்களை நுழைத்துக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை சுதந்திரம் அற்ற வாழ்க்கை. வேலைகள் இல்லாமல் ஓய்வெடுக்கும் முதுமை காலத்தில் தான் பலருக்கு மனதில் ஏதேதோ நினைவுகள் தோன்றும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டால் முதுமை காலம் சுதந்திரமாக தோன்றும்..!!

Read Entire Article