உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதியா? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கண்டனம்

9 hours ago
ARTICLE AD BOX

பணி ஓய்வு நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது மற்றும் பணப்பலன்கள் வழங்காததை எதிர்த்து தூத்துக்குடி துணை ஆட்சியராக பணியாற்றிய செல்வநாயகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இன்று நடைபெற்றது. 

Advertisment

அப்போது, நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் புறக்கணிப்பதாக நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். "நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசு ஒன்றும் மதிப்பதாகத் தோன்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என்று அரசு உறுதி பூண்டதுபோல் இருக்கிறது," என்று விமர்சித்தார்.

மேலும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் கல்வித் துறையைச் சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்நிலைமை குறித்து நீதிமன்றம் எடுத்துக்காட்டிய கடும் கண்டனம், அரசு நிர்வாகத்தின் செயல்பாடு மீதான பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Read Entire Article