'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' - அப்படியா? யார் சொன்னது?

2 days ago
ARTICLE AD BOX

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. உப்பில்லாத எந்த உணவும் ருசிக்காது. உணவில் உப்பு அதிகமாகும்போது அது உடம்பில் சில நோய்களின் வருகைக்கு அஸ்திவாரம் அமைப்பது போலாகிவிடும். உப்பு சேர்க்காமல் உணவுக்கு சுவை கூட்ட முடியுமா?

இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் ஏழு வகையான உணவுப் பொருள்கள், உப்பு சேர்க்காமலே உணவுக்கு சுவை உண்டாக்க உதவுபவை. அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1.பூண்டு மற்றும் வெங்காயம்:

பூண்டும் வெங்காயமும், அவை ஃபிரஷ்ஷாக, பவுடராக அல்லது ரோஸ்டட்டாக என எந்த வடிவில் இருந்தாலும் அதை எந்த உணவுடன் சேர்த்தாலும், உப்பு சேர்க்காமலே அந்த உணவு சுவை பெறும். இதற்கு காரணம் அவற்றின் காரத் தன்மையேயாகும்.

2. மூலிகைகள் மற்றும் ஸ்பைஸஸ்:

பஸில், ஒரெகானோ, தைம், ரோஸ் மேரி, பார்ஸ்லே மற்றும் ஸிலான்ட்ரோ போன்ற மூலிகைகளையும், மஞ்சள், சீரகம், கொத்தமல்லி மற்றும் பாப்ரிகா போன்ற ஸ்பைஸஸ்களையும் உணவுடன் சேர்க்கும்போது, உப்பு சேர்க்காமலே அந்த உணவு சுவை பெற்றுவிடும்.

3.வினிகர் :

ஆப்பிள் சிடார் வினிகர், பால்ஸாமிக் வினிகர் மற்றும் ரெட் வைன் வினிகர் எதுவாயினும் அதை உணவுடன் சேர்க்கும்போது அந்த உணவின் சுவை சிறந்த முறையில் வெளிப்படும். வினிகரை சாலட், மரினேட் (Marinade) அல்லது ரோஸ்டட் வெஜிட்டபிள்களுடன் சேர்த்து சுவையோடு உண்ணலாம்.

இதையும் படியுங்கள்:
சத்துமிகுந்த பச்சை நிற காய்கறி புலாவ் மற்றும் வெள்ளை குருமா..!
Salt

4.லெமன் மற்றும் லைம்:

இது மாதிரியான சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே சுவையூட்டக் கூடிய குணம் கொண்டவை. இவற்றை உணவுடன் சேர்க்கும்போது அவ்வுணவுக்கு ஒரு டேஞ்ஜி (tangy) டேஸ்ட் கிடைக்கும். லெமன் அல்லது லைம் ஜுஸை மீன், வெஜிட்டபிள்கள் மற்றும் சாலட் டிரஸ்ஸிங்களில் சேர்த்து உண்ணலாம்.

5. கடுகு:

டைஜோன் அல்லது மஞ்சள் என எந்த வகை கடுகாய் இருந்தாலும் அது மற்ற உணவுடன் சேரும்போது அந்த உணவுக்கு ஷார்ப்பான, டேஞ்ஜியான சுவை வழங்கத் தவறாது. இது டிரஸ்ஸிங்ஸ், மரினேட்களிலும், பர்கர் மற்றும் சாண்ட்விச்களில் டாப்பிங்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

6. உப்பு சேர்க்காத சீசனிங் கலவைகள்:

மூலிகைகள், ஸ்பைஸஸ், உலர்ந்த காய்கறிகள் ஆகியவற்றை முன் கூட்டியே கலந்து, உணவுகளில் சீசனிங் செய்வதற்காக தயாரிக்கப்படும் உப்பில்லாத கலவைகள்.

7.கடல் பாசிகள் (Seaweeds):

நோரி மற்றும் கெல்ப் போன்ற கடல் பாசிகளில் இயற்கையிலேயே உப்பு சுவை உள்ளது.

இதையும் படியுங்கள்:
சோர்வு நீக்கும் தேர்வு கால ரெசிபிகள்!
Salt

கடல் பாசிகளை சுஷி, சாலட் போன்ற உணவுகளில் சேர்த்து உண்ணலாம்; சீசனிங் செய்யவும் பயன்படுத்தலாம்.

Read Entire Article