உத்தரபிரதேசத்தில் பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி

2 days ago
ARTICLE AD BOX

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள திக்பால்கஞ்ச் பாதாய் பகுதியில் இருந்து 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பைக் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சராய் மணிஹார் கிராமத்திற்கு அருகே உள்ள பீகார்-பக்சர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதியது.

இந்த கோர விபத்தில் இரட்டையர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சபவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் சர்பராஸ் (22) மற்றும் இரட்டை சகோதரர்கள் அர்பாஸ் கான் (16) மற்றும் அடில் கான் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் சிங் தெரிவித்துள்ளார்.


Read Entire Article