ARTICLE AD BOX
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு: 47 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவைத் தொடர்ந்து, பத்ரிநாத்துக்கு அப்பால் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள் நிலைமை குறித்து மீட்பு படையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
பனிச்சரிவில் இருந்து குறைந்தது 10 தொழிலாளர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
ஆரம்ப அறிக்கைகளின்படி, 57 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
இதுவரை, 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் அவர்களுள் சிலர் பனிச்சரிவின் போது தப்பிக்க முடிந்தது.
மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
பனிச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) பணிபுரியும் ஒரு தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் சாலை கட்டுமானப் பணியில் பணியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மீட்பு
கடுமையான பனிப்பொழிவு மீட்பு பணிகளை தாமதப்படுத்திகிறது
உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ITBP மற்றும் கர்வால் சாரணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு நடவடிக்கை குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றாலும், கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு, நிலைமை இன்னும் சிக்கலாகவே இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் ராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்று உத்தரகண்ட் காவல்துறை ஐஜி நிலேஷ் ஆனந்த் பர்னே தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், BRO நிர்வாகப் பொறியாளர் , சம்பவ இடத்திற்கு மூன்று முதல் நான்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புக் குழு சம்பவ இடத்தை அடைவதில் சிரமங்களை எதிர்கொள்கிறது.