ARTICLE AD BOX
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த காஜல் என்ற 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் உறவினரான சுராஜ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் தந்தை ரவி பாபு, தாய் ரித்து மற்றும் உறவினர் ராதா தேவி ஆகிய 3 பேரை கைது செய்தனர். உயிரிழந்த சிறுமியின் உடலை அவர்கள் தங்கள் வீட்டின் அருகே குழி தோண்டி புதைத்திருந்தனர். அந்த உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை பரேலி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குடும்பத்திற்குள் இருந்த தகாத உறவு தொடர்பான விவகாரம் சிறுமிக்கு தெரியவந்ததாகவும், அதனை அவர் வெளியே சொல்லிவிடுவார் என பயந்து சிறுமியை 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார் யாதவ், கைது செய்யப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.