உதயம் தியேட்டர் வாசலில் படுத்த நடிகை அஞ்சலி.. பிரபலம் உடைத்த ரகசியம்

3 days ago
ARTICLE AD BOX

அஞ்சலி

நடிகை அஞ்சலி கோலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர். அவரது நடிப்பு திறமைக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், வெப் சீரிஸ்களிலும் அஞ்சலி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஷங்கரின் கேம் சேஞ்சர் மற்றும் மதகஜராஜா படம் வெளியானது.

ரகசியம் 

இந்நிலையில், அஞ்சலி நடித்த அங்காடித்தெரு படத்தில் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 2 சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார்.

அதில், "அங்காடித்தெரு படத்தில் நடிக்கும்போது அஞ்சலிக்கு மனரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதாவது, அஞ்சலியும், அவரது தங்கையும், சென்னை உதயம் தியேட்டர் முன்புள்ள பிளாட்பாரத்தில் படுத்து தூங்குவது மற்றும் வீராணம் ராட்சத குழாய்களில் தங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இயக்குநர் கட்டாயத்தில், வேண்டாவெறுப்பாக அந்த சீன்களை நடித்து தந்தார் அஞ்சலி. அதுமட்டுமின்றி, இப்படம் தொடங்குவதற்கு முன் 4 மணி நேரம் ஒருபெரிய ஜவுளி கடையில் நின்று, சேல்ஸ் கேர்ள் செய்யும் பணிகளை கவனித்து கொண்டார்" என்று கூறியுள்ளார்.   

Read Entire Article