உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை, பதிலுக்கு திமுகவினர் செய்த சம்பவம்

6 days ago
ARTICLE AD BOX

உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை, பதிலுக்கு திமுகவினர் செய்த சம்பவம்

Chennai
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார். முன்னதாக கெட் அவுட் மோடி என்று கூறுவோம் என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பதிலடியாக அண்ணாமலை நேற்று கூட்டத்தில் ஆவேசமாக பேசினார். இதற்கு பதிலடியாக திமுகவினர் செய்த சம்பவம் எக்ஸ் தளத்தில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில்,"இங்க இருக்கிற அலப்பறை பசங்க.. சொந்த ஊரை தாண்டினால் யாருக்குமே தெரியாது.. நான்கு அல்லக்கைகளை வைத்துக்கொண்டு அண்ணன் வருகிறார் என்று சொன்னால் தான் தெரியும்.இந்த அல்லக்கைகள் பாரத பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து குற்றம் சுமத்துகிறார்கள்..

Annamalai Udhayanidhi Stalin narendra modi

நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு(ஒருமையில் பேசினார்) பார்க்கலாம்.. வாயில் இருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர்.. எங்கப்பா சிட்டிங் முதல்வர்... நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம்...

இரண்டு நாளைக்கு முன்னாடி என்ன சொன்னார் உதயநிதி.. கெட் அவுட் மோடி வெளியே போ மோடி என்று சொல்வாராம்.. சொல்லி பாரு பார்க்கலாம் ..கத்துக்குட்டி நீ.. காலையில் 11.30மணிக்கு தான் உன் மேல் வெயிலே படும்.. சூரியனை நேராக பார்த்தது கூட கிடையாது... சூரியன் மேல வந்தால் தான் அண்ணாந்து பார்க்கும் ஆள் நீ.. சூரியனை பார்த்து துப்பி அந்த எச்சில் உன் மேல் விழும்.. அப்படிப்பட்ட ஆள் நீ.. 3.30மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, யோகா செய்து, ஐந்து மணிக்கு பைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி செய்கிற ஆளுகிட்ட, 11 .30 மணிக்கு சூரியன் மேல் விழும் போது எழுகின்ற உனக்கு இவ்வளவு திமிர் இருந்தால், நாட்டுக்காக உழைத்து முன்னேற்றும் சாதாரண மக்ககளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.. " என்று கூறியிருந்தார்.

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தந்த உறுதி
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தந்த உறுதி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று காலையில் இருந்தே எக்ஸ் தளத்தில் கெட் அவுட் மோடி என்பதை திமுகவினர் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விட்ட நிலையில், கெட் அவுட் மோடி ஹேஷ்டோக்கை அகில இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறார்கள். அந்த ஹேஷ்டேக்கில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், பாஜகவிற்கு எதிராகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும் கருத்துக்களை, கேலி சித்திரங்களை,வீடியோக்களை திமுகவினர் பரப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
English summary
The incident that the DMK did to retaliate against Annamalai, who spoke in unison with Udhayanidhi Stalin
Read Entire Article