உண்மையிலேயே மாமன்னனா? கேள்வி கேட்டு வடிவேலுவை மிரள வைத்த நிருபர்கள்

10 hours ago
ARTICLE AD BOX
vadivelu

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருபவர் வைகை புயல் வடிவேலு. இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தன்னுடைய வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார். வறுமையான குடும்பத்தில் இருந்து வந்து ஒரு சிறிய கடையில் வேலை பார்த்த வடிவேலுவுக்கு நடிகர் ராஜ் கிரணின் அறிமுகம் கிடைத்தது. ஒரு திருமண விழாவில் ராஜ்கிரணை பார்த்த வடிவேலு அவர் முன்னாடி தன்னுடைய நடிப்புத் திறமையையும் பாடல் திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதில் இம்ப்ரஸ் ஆன ராஜ்கிரண் தன்னுடைய படத்தில் நடிக்க வைக்கிறார். ஆனால் முதலில் என் தங்கை கல்யாணி படத்தில் தான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் வடிவேலு. அதனால் அவரை அறிமுகப்படுத்தியது டி ராஜேந்தர் தான் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி இருக்கின்றது. ஆனால் இதுவரைக்கும் வடிவேலு தன்னை டி ராஜேந்திரன் தான் அறிமுகப்படுத்தினார் என எங்கேயும் அவர் சொன்னதில்லை .என் ராசாவின் மனசிலே திரைப்படம் தான் இவருடைய முதல் படம் என மக்களும் இதுவரை நம்பி வருகின்றனர்.

ஆனால் இந்த படத்திற்கு முன் என் தங்கை கல்யாணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் எல்லாமே என் ராசாதான் ,பாசமுள்ள பாண்டியரே, பொண்ணு விளைகிற பூமி என தொடர்ந்து ராஜ்கிரணின் பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் வடிவேலு. இந்த படங்களுக்குப் பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராஜ்கிரண் நடித்த காவலன் திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

23

23

இருந்தாலும் வடிவேலுவுக்கு ஒரு நிலையான அந்தஸ்தை பெற்றுத் தந்த படமாக அமைந்தது சின்ன கவுண்டர் திரைப்படம். அதில் விஜயகாந்துடன் படம் முழுக்க டிராவல் செய்யும் ஒரு கதாபாத்திரமாகவே நடித்திருப்பார். அதிலிருந்து தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய முத்திரையை பதிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து காமெடி நடிகராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்த வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர நடிகராக தன்னுடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.

மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வடிவேலுவின் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை .ஆனால் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது. சுந்தர் சி யின் கேங்கர்ஸ் திரைப்படமும் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படமும் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு பிறகு பிரபுதேவா உடன் ஒரு படத்தில் இணைய போவதாக வடிவேலு சமீபத்திய ஒரு பேட்டியில் கூறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

gangers

gangers

இந்த நிலையில் வடிவேலுவை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என்ற ஒரு கேள்வியை கேட்டனர். அதற்கு அய்யோ ஆளை விடுங்கடா சாமி என்பதைப் போல சரி நான் வருகிறேன் என சொல்லிவிட்டு சென்றார். அதைப்போல மாமன்னன் படத்தில் போலவே நீங்கள் நிஜத்திலும் அப்படித்தானா என்ற ஒரு கேள்வியை முன் வைத்தனர். அதற்கு வடிவேலு நான் ஒரு சாதாரண மனிதன் தான். ஏன் மாமன்னன் திரைப்படத்தில் வேட்டி சட்டை அணிந்தது போல உங்கள் முன் வந்து நிற்கணுமா என்று பதிலுக்கு வடிவேலு ஒரு கேள்வியை போட்டார். அடுத்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய பங்களிப்பு என்ன என்ற ஒரு கேள்விக்கு அரசியல் மட்டும் பேசாதீர்கள் என சொல்லிவிட்டு சென்றார் வடிவேலு.

Read Entire Article