ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. இதில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என அனைத்துமே மிகவும் சொதப்பலாக இருந்தது.
இந்த நிலையில்தான் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், விக்கெட்டை பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் அப்ரார் அஹமத் வீழ்த்தினார். ஒரு சிறந்த பந்தில் தான் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமத் இவ்வளவு அற்புதமாக பந்து வீசினாரே என ரசிகர்கள் பாராட்டுவதற்குள் சுப்மன் கில் விக்கெட்டை அவர் கொண்டாடிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் வீரர்கள் சாடல்:
கையை கட்டிக்கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூம்மை பார்த்து போ என்று கண்ணால் அப்ரார் அகமத் சைகை செய்தார். இது இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களையும் கடுப்படையச் செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம், தோல்வி தழுவும் நேரத்தில் இதுபோன்ற கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தவறு என்று சாடியிருந்தார்.
நீங்கள் செய்வது தவறு என்று உங்களிடம் சொல்வதற்கு கூட சரியான ஆள் இல்லாததுதான் சோகமான நிலை என்றும் வசீம் அக்ரம் கூறியிருந்தார். இதுபோல் சிறந்த பந்தை வீசிவிட்டு இப்படி மோசமான முறையில் நடந்து கொண்டதால், அந்த பந்தை யாரும் பாராட்டாமல் போகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
அப்ரார் அகமது விளக்கம்:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சோயிப் அக்தர் பாகிஸ்தான் வீரர்களுக்கு திறமையும் இல்லை அறிவும் இல்லை என்று சாடியிருந்தார்.இந்த நிலையில் தாம் ஏன் அவ்வாறு கொண்டாடினேன் என்பது குறித்து அப்ரார் அஹமத் விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் சாதாரணமாக தான் கில்லின் விக்கெட்டை எடுத்து விட்டு கொண்டாடினேன். சொந்த மண்ணிலும் இதே போல் தான் விக்கெட்டை எடுத்து நான் கொண்டாடுவேன் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: CT 2025: செமி பைனலில் இந்திய அணி யாருக்கு எதிராக ஆடும்.?. நடக்கும் நாள் மற்றும் நேர விபரங்கள்
மேலும் கில் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய விதம் குறித்து கேள்வி எழுப்பிய இந்திய செய்தியாளர்களுடன் அப்ரார் அகமத் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக பாபர் அசாம் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஹர்திக் பாண்டியா பை பை காட்டி கொண்டாடினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமத் இப்படி செய்ததாக அந்நாட்டு ரசிகர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அப்ராஹ் அஹ்மதின் இந்த கொண்டாட்டம் சமூக வலைத்தளத்தில் மீம் மெட்டீரியல் ஆக மாறி இருக்கிறது.
The post உண்மையா சொல்றேன்.. நான் கில் விக்கெட்டை அப்படி கொண்டாட காரணம் இது தான் appeared first on SwagsportsTamil.