ARTICLE AD BOX
சர்க்கரை நோய் பாதிப்பினால் உடல் தசையில் மாற்றம், வலு இல்லாமல் இருப்பதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது குறித்து பிரபல மருத்துவர் தீபா விளக்கி கூறியுள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலே இரண்டுமே நீரிழிவு நோய் தான்.
இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு, பல மருத்துவமுறைகள், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக, சப்போட்டா மற்றும் மாம்பழம சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய், பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
அதேபோல் கிழங்கு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கிழங்குகள் சாப்பிட வேண்டும் என்றால், பனங்கிழங்கு மற்றும் முடவாட்டுக்கால் கிழங்கை சாப்பிடலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் உடை குறைந்து தசைகள் வலு இழந்து காணப்படும். இதனை சரி செய்ய டாக்டர் தீபா ஒரு வழி கூறியுள்ளார்.
உடலில் இருக்கும், தசைகளை வலுப்படுத்த சுண்டைக்காய் ஒரு முக்கிய உணவாக பயன்படுகிறது. அதேபோல் சாதாரண அரிசிக்கு பதிலாக பாரம்பரிய அரிசியை எடுத்துக்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மைகள் அதிகம் தரக்கூடியது. குறிப்பாக காட்டு யாணம், கல்லூண்டை சம்பா ஆகிய இரண்டு அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்வர்கள், உடலில் தசைகள் வலிமையில்லாமல் இருப்பார்கள்.
அவர்களுக்கு இந்த 2 அரிசி வகைகளும் பெரிய நன்மைகள் தரக்கூடியது.
இந்த அரிசி குறைந்தது 8 மணி நேரம் ஊற வேண்டும். அப்படி என்றால், இரவு ஊறவைத்தால் காலையில் தான் சாப்பாடு செய்ய முடியும். அதேபோல் இந்த அரிசியை குக்கரில் கூட சமைத்துக்கொள்ளலாம். இதில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால், குக்கரில் செய்தாலும் கஞ்சி வடியாது என்பதால் அதன் சத்துக்கள் அப்படியே இருக்கும் என்று டாக்டர் தீபா கூறியுள்ளார்.