ARTICLE AD BOX
உடற்பயிற்சி செய்யும் போது கண்டிப்பாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!
தினசரி வாழ்க்கையில் நாம் ஒரு சில விஷயங்களை எல்லாம் முக்கியமாக உடல் ரீதியாகவும் சரி மனரீதியாகவும் சரி, ஆரோக்கியமாக இருக்க செய்து வருவோம். இந்நிலையில் உடலையும் சரி மனதையும் சரி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்று. இருப்பினும் பலரும் உடற்பயிற்சியை செய்ய விரும்புவதில்லை. இந்நிலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் கண்டிப்பாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை வெளியேறும். ஆனால் அந்த வியர்வையை கையால் துடைக்க கூடாது. அவ்வாறு துடைக்கும் போது நம்முடைய சருமத்தில் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே மென்மையான ஒரு துணியை தான் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது அலங்காரத்தை விரும்பக் கூடாது. உடற்பயிற்சி செய்யும் போது கூந்தலை இறுக்கமான மற்றும் தளர்வான கூந்தல் போன்ற அலங்காரத்தை செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. முடி உதிர்வு உடைதல் போன்றவற்றுக்கு இவை காரணமாக கூட அமையலாம். அதேபோல உடற்பயிற்சி செய்யும் போது உடலை மனமாக வைத்துக்கொள்ள எந்த வாசனை திரவியத்தையும் பயன்படுத்த க்கூடாது.