உங்கள் காதுகளை வைத்தே நீங்கள் யார், எப்படிப்பட்டவர்னு புட்டு புட்டு வைத்துவிடுவோமே!

4 hours ago
ARTICLE AD BOX

உங்கள் காதுகளை வைத்தே நீங்கள் யார், எப்படிப்பட்டவர்னு புட்டு புட்டு வைத்துவிடுவோமே!

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் காதுகளை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை எங்களால் சொல்ல முடியும். ஜாதகம் இருந்தால் மட்டும்தான் என்றில்லை, இது போன்ற உறுப்புகளை வைத்தும் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிடலாமே!

ஒவ்வொரு மனிதனுக்கு என தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அது அவர்களுடன் பழகும்போதுதான் வெளிப்படும். ஆனால் ஒருவரின் கைவிரல்கள், கால் விரல்கள், நிற்கும் நிலை, அமரும் ஸ்டைல், கால் மேல் கால் போடும் ஸ்டைல் உள்ளிட்டவைகளை வைத்தே குணங்களை சொல்லிவிடலாம்.

personality test ears

ரத்த வகையை வைத்து கூட ஒரு நபர் எப்படி இருப்பார் என சொல்லப்பட்டதை எல்லாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தற்போது காதுகளை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லலாமே!

உங்கள் காதுகளை கண்ணாடியில் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் காது சிறியதாக இருக்கிறதா பெரியதாக இருக்கிறதா என பாருங்கள். காது மடல்களிலேயே மறைமுகமாக உங்கள் கேரக்டர் இருக்கும்.

பெரிய காதுகள்

personality test ears

பெரிய காதுகள் என்றால் நீங்கள் மனதில் பட்டதை தைரியமாக பேசுபவர்கள். பதற்றமான சூழலில் கூட நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையை மக்கள் போற்றுவார்கள். அவ்வப்போது உங்களிடம் ஆலோசனைகளை பெறுவார்கள். உண்மையை பேச நீங்கள் எப்போதுமே பயப்பட மாட்டீர்கள்.

உங்கள் வாழ்க்கையை ஒரு குதூகலமான சாகசமாகவே பார்ப்பீர்கள். எந்த சந்தர்ப்பங்களையும் உற்சாகமாக எடுத்துக் கொள்வீர்கள். மன அழுத்தமும் கவலையும் எப்போதுதாவது உங்களுக்க ஏற்படும். ஆனாலும் அந்த தருணத்தையும் நீங்கள் மகிழ்வாக கடத்துவீர்கள்.

நடந்த காலத்தையோ நிகழ் காலத்தை பற்றியோ கவலைப்பட மாட்டீர்கள். எதுவும் கடந்து போகும் என்ற மனநிலையை கொண்டிருப்பீர்கள். புதிய புதிய நபர்களை சந்திப்பீர்கள். அடுத்த சாகசத்திற்கு போராட்டத்திற்கு எப்போது தயாராவீர்கள்.

சிறிய காதுகள்

personality test ears

உங்களுக்கு சிறிய காதுகள் இருக்கிறது என்றால் நீங்கள் எப்போதும் எதையாவது நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் பேச மாட்டீர்கள். உங்கள் மனதில் தோன்றுபவைகளை யாரிடமும் பகிராமல் மனதிற்குள்ளேயே வைத்து புழுங்குவீர்கள். எதையும் கவனமாக கையாள நினைப்பீர்கள். உங்கள் சுற்றுவட்டாரங்களை எப்போதும் கவனித்து அலர்ட் மோடில் இருப்பீர்கள். புதியவர்களிடம் பேசவே வெட்கப்படுவீர்கள். உங்களை அடுத்தவர்களிடம் இருந்து பாதுகாக்க எப்போதும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். புரணி அல்லது கிசு கிசு பேசுவதை விட அர்த்தமுள்ள உரையாடல்களையே விரும்புவீர்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் நன்றாக பழகுவீர்கள்.

நீங்கள் எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், உளவியல் நிபுணர், தரவு ஆய்வாளர், நூலகர், விஞ்ஞானி, கட்டடவியல் நிபுணர், அக்கவுன்ட்டன்ட், உள்ளிட்ட பணிகளில் இருப்பீர்கள்.

More From
Prev
Next
English summary
Personality test: Your ears can reveal what type of character you are!
Read Entire Article